tamilnadu

img

ஏமபேர் கால்வாய் திறப்பு சிபிஎம் கோரிக்கை வெற்றி

ஏமபேர்  கால்வாய் திறப்பு  
சிபிஎம் கோரிக்கை வெற்றி

விழுப்புரம், மார்ச் 18-  சிபிஎம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், முகையூர்,கணை, திருவெண்ணைநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் கருகும் பயிர்களை  காப்பாற்ற தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு சாத்தனூர் அணையை முன்கூட்டியே திறக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மார்ச் 12 அன்று  சாலை மறியல் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனை முன்னிட்டு  கடந்த மார்ச் 11 அன்று கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத் தில் வட்டாட்சியர் தலைமையில் நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை உதவி  பொறியாளர் மற்றும் கணை உதவி ஆய்வாளர் முன்னிலையில் நடைபெற்ற அமைதி குழு பேச்சு வார்த்தையில் விவசாயி களின் நலனை பாதுகாக்க மார்ச்-16 ஆம் தேதி சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக  உறுதி அளித்தனர். இதனை தீக்கதிர் நாளிதழ் கடந்த 13- ந்தேதி செய்தி வெளியிட்டது. இதனையடுத்து மார்ச்18- ந்தேதி தென் பெண்ணை ஆற்றின் பம்பை வாய்க்காலில்  கருகி வரும் விவசாயிகளின் பயிர்களை காக்கும் வகையில் ஏமபேர்  என்ற இடத்தில் உள்ள நீர்வரத்து மதகு கதவை அதிகாரி கள் திறந்து விட்டனர். இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓசூர் பழைய பேருந்து நிலையம் அருகே 
சாலையில் உருவான கழிவுநீர் கால்வாய்

ஓசூர் பழைய பேருந்து நிலையம் சீதா ராம்மேடு பகுதியில், கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு பகுதி யில்  மக்கள் பயன்பாட்டு சாலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கழிவு நீர் சாலையி லேயே கால்வாய் போல் ஓடிக்கொண்டிருக்கி றது.  ஓசூர் உள் வட்ட சாலை துவங்கும் இடத்தில் சாலை நடுவில் உள்ள பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சுமார் 1 கிமீ தூரத்திற்கு துர்நாற்றத்துடன் ஓடி தேங்கி கடும் மாசு ஏற்படுத்தி வருகிறது. இப்பகுதியில் ஓசூர் சிப்காட் II உட்பட சுமார் 1000 தொழிற்சாலைகள்,பல தனியார் பள்ளிகள், கணக்கற்ற தனியார் குடியிருப்பு கள்,செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,அதியமான் கல்லூரி உள்ளிட்ட நிறுவனங்கள் நிறைந்த போக்கு வரத்து நெரிசல் மிகுந்தது. குறிப்பாக மக்கள் பயன்பாட்டு சாலை யில் பெரும் பகுதி கழிவுநீர் ஓடை போல்  காட்சியளிக்கிறது. தினமும் சுமார் 3000-க்கும் மேற்பட்ட இருசக்கர 4 சக்கர வாகனங்கள் சென்று வரும் முக்கியமான இப்பகுதியில் தினமும் பலர் விபத்துகளுக்கு ஆளாகி வரு கின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் பிரதான சாலைக்கும் பயன்பாட்டு சாலைக்கும் இடை யில் உள்ள பாதாள கழிவு நீர் கால்வாய் நீண்ட  காலமாக பராமரிக்கப்படாமல் உள்ள நிலை யில் பல வணிக நிறுவனங்கள் தொழிற்சாலை களின் கழிவுநீர் இந்த கால்வாயில் விடப் படுவதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி எந்நேரமும் வற்றாதஜீவநதியாக ஓடிக்கொண்டே இருக்கிறது. சாலை முழுவதும் தேங்கி மக்களுக்கும் வாகனங்களுக்கும் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொசு, விஷ பூச்சிகள்  உற்பத்தி பெருகி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. துளியும் செயல்படாத தேசிய நெடுஞ் சாலை பராமரிப்புத்துறை  தனது கும்பகர்ண தூக்கம் கலைக்குமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.