tamilnadu

கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் 4 வழிபாதைக்காக காத்திருக்கும் பொதுமக்கள்

கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்க த்தில் நான்கு வழி  பாதை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி 6  ரயில் நிலையங்களில், 1 லட்சம் பேரிடம் கையெழுத்துகளை வாங்கும் இயக் கத்தை  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திங்களன்று  (பிப் 17),  துவக்கியுள்ளனர். சென்னையிலிருந்து கும்மிடிப் பூண்டி ரயில் நிலையம் வரை 47 கி.மீ,  தூரம் உள்ளது. இந்த வழித்தடத்தில் தினம் 43 புறநகர் ரயில்கள் இயக்கப் படுகிறது. ஏறக்குறைய நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் மக்கள் பய ணிக்கின்றனர். இந்த மார்க்கத்தில் புறநகர் ரயில்கள் கும்மிடிப்பூண்டியி லிருந்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 1 மணி நேரத்தில் கடக்க முடியும். இந்த தூரத்தை கடக்க 2 மணிநேரத்திற்கும் மேல் கூடுதலான நேரத்தை எடுத்துக் கொள்கிறது. இதனால் சிறு, குறு நிறுவனங் களில் பணிபுரியும் தொழிலாளர் கள், அரசு ஊழியர்கள், மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக செல்பவர் கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாண வர்கள் காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. விரைவு ரயில் களுக்கு வழிவிட்டு ஆங்காங்கே ஒதுங்கி நிற்கிறது. சரக்கு ரயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட பயணிகளுக்கு கொடுப்பதில்லை. வெளியூர்களுக்கு செல்ல புறநகர் ரயில்களையே நம்பி லட்சக்கணக் கான மக்கள் உள்ளனர். குறித்த  நேரத்தில் புறநகர் ரயில்கள் இயக்கப் படாததால் பயணிகள் பெரும் சிர மத்திற்கு ஆளாகின்றனர்.  இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி மார்க்கத்தை 4 வழி பாதையாக மாற்ற வேண்டும் என கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக ரயில் பயணிகள் சங்கம், பொது மக்கள், மற்றும் அனைத்து கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.ஒன்றிய பாஜக அரசு போதிய நிதி ஒதுக்காமல் காலம் கடத்துகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு அத்திப்பட்டு வரை 4வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக பயன்படுத்த முடிய வில்லை. சூளூர்பேட்டை வரை  4வழி பாதையை அமைத்தால் தான் கால தாமதத்தை தவிர்க்க முடியும். விரைவு ரயில்கள் கும்மிடிப்பூண்டியில்  நின்று செல்ல கோரிக்கை  கும்மிடிப்பூண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளதால், வெளி மாநில தொழிலாளர்கள் வந்து செல்லவும், வணிகர்கள் வியாபாரம் செய்ய ஏதுவாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டும். இந்த மார்க்கத்தில் எங்கும் விரைவு ரயில்கள் நிற்க வில்லை. இதனால் சென்னை சென்று  அங்கிருந்து மீண்டும் கும்மிடிப் பூண்டிக்கு வரவேண்டிய அவலம். இதனால் நேரம், பணம் விரைய மாவதை தடுக்க கும்மிடிப்பூண்டி யில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கை வலு வாக எழுந்துள்ளது. நிறுத்தப்பட்ட ரயில்களை  மீண்டும் இயக்க வேண்டும் கும்மிடிப்பூண்டியிலிந்து அதி காலையில் 2 .45 மணிக்கு புறப்படும் புறநகர் ரயிலில் பால், கீரை, காய்கறி கள், பூ வகைகள், மாம்பழம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கும்மிடி ப்பூண்டி, கவரைப்பேட்டை,  பொன்னேரி ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலிருந்து சென்னைக்கு கொண்டு செல்வார்கள். மேலும் சிப்காடில் இரவு பணி முடித்து செல்பவர்கள், மாநகர பேருந்து ஓட்டு நர்கள், நடத்துநர் ஆகியோர் சென்னை செல்ல வசதியாக இருந்தது. புறநகர் ரயிலை மீண்டும் இயக்கிடுக மற்றும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 12.15 மணிக்கு புறப்படும் கடைசி வண்டி யாகும். வெளியூர்களில் இருந்து நம்பிக்கையாக வருவார்கள். கடைகளை மூடிவிட்டு சாவகாசமாக வீட்டிற்கு செல்வார்கள். அதே போல வடசென்னை தொழிலாளர் கள் இரவு பணியை முடித்து விட்டு  வீட்டிற்கு செல்வார்கள். இந்த வண்டி  நிறுத்தப்பட்டதால் அனைவரும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர். காலை, மாலை நேரங்களில் கூடுதல்  ரயில்களை இயக்க வேண்டும். கழிவறைகளை திறக்க வேண்டும், மீஞ்சூரில் ரயில்வே காவல் நிலையம் அமைத்து பயணி களின் பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திங்க ளன்று (பிப் 17) கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, அனுப்பப்பட்டு, மீஞ்சூர், அத்திப் பட்டு,  ஆகிய 6 ரயில் நிலையங்க ளில் 1 லட்சம் கையெழுத்துகளை பெறும் இயக்கம் நடைபெற்று வரு கிறது.