tamilnadu

எட்டியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் செப்.16 ஆட்சியர் தலைமையில் வழிபாடு

திருவள்ளூர், செப் 12- திருவள்ளூர் மாவட்டம் வழுதலம்பேடு எட்டியம்மன் கோயிலில் செப் 16 அன்று காலை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலை மையில் பட்டியல் இன மக்கள் வழிபாடு செய்ய உள்ளனர்.  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழனன்று  (செப்.12) இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள வழுதலம்பேடு கிராமத்தில் எட்டியம்மன் கோயில் தலித் மக்களை  சாமி தரிசனம் செய்ய விடாமல் பிற்படுத்தப்பட்ட மக்கள்  தடுத்து நிறுத்தினர். வழிப்பாட்டு உரிமை களை நிலைநாட்டும் பொருட்டு தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் வியாழனன்று (செப் 12),  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலை மையில் இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.  ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த பொது மக்கள் கோயிலில் வழிபாடு செய்வதை  மற்ற பிரிவைச் சேர்ந்த மக்கள் யாரும் ஆட்சேபனை செய்ய கூடாது போன்ற முடிவு கள்  இரு தரப்பினருக்கும் இடையே நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வரவேற்றுள்ளனர். பேச்சுவார்த்தையில்  மாவட்ட ஆட்சியர்  த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பொன் னேரி ஆர்டிஓ, கும்மிடிப்பூண்டி வட்டாட்சி யர், இந்து சமய அறநிலையத் துறை கும்மிடிப்பூண்டி ஆய்வாளர்,  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொருளாளர் இ.மோகனா, மாவட்ட தலைவர் இ.எழிலர சன், மாவட்ட செயலாளர் த.கன்னியப்பன், பொருளாளர் எம்.சிவகுமார், சிபிஎம் கும்மிடிப்பூண்டி வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் மற்றும்  ஊர் தரப்பில் 7 பேரும் கலந்து கொண்டனர்.