மாமேதை கார்ல் மார்க்சின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்சின் பிறந்தநாளில், ‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்!
உழைப்போர்க்கு உறுதுணையான மார்க்சியச் சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அவரது திருவுருவச் சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நானே நேரில் சென்று தேர்வு செய்து, சிலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது! சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதர் மார்க்சின் சிந்தனைகள், மானிடச் சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும்!" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.