கடலூரில் காரல் மார்க்ஸ் பிறந்த தினக் கொண்டாட்டம்
கடலூர், மே 5- “உலகத் தொழிலாள ர்களே ஒன்று சேருங்கள். இழப்பதற்கு ஒன்றுமில்லை. அடிமைச் சங்கிலி ஒன்றைத் தவிர, பெறுவதற்கு ஒரு பொன்னலகம் காத்திருக் கிறது என்று கூறிய மாமேதை காரல் மார்க்சின் 207வது பிறந்த தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூர் மாவட்டக் குழு அலு வல கத்தில் உள்ள மார்க்சின் சிலைக்கு மாவட்டச் செய லாளர் கோ.மாதவன் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சி மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் மாத இதழ் ஆசிரியர் குழு சார்பில் ச.லெனின் கலந்துகொண்டு உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கருப்பையன், வி.சுப்ப ராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஒன்றியச் செயலாளர் பஞ்சாசரம், மாவட்டக் குழு உறுப்பினர் பி.வெங்கடேசன், குடியி ருப்போர் சங்க சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், போக்குவரத்து அரங்க நிர்வாகி பாஸ்கரன், எழுத்தாளர் சங்க மாவட்டச் செயலாளர் பால்கி, மாநகரகுழு உறுப்பினர்கள் கருணாகரன், ஸ்டாலின், தேவநாதன், செந்தில், பூபதி, பழனி, ஷாகீரா, (மாணவர் சங்கம்) சுகினா பாரதி, (வாலிபர் சங்கம்) ஆனந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.