tamilnadu

img

திருச்சியில் 'கலைஞர் நூலகம்' - அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் 7 தளங்களுடன் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி, திருச்சியில் உலகத்தரத்துடன் 4.57 ஏக்கரில் 1,97,337 சதுரடி அளவில் அமையவுள்ள கலைஞர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்திற்கு, இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.