tamilnadu

img

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

சென்னை,அக்.03- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 30 பேர் மீது சென்னை காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் முனாள மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைச் எய்யப்பட்ட வழக்கில் இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 25 பேர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது விசாரணைகள் முடிவடைந்த நிலையில் சென்னை மாநகர காவல்துறை 30 பேர் மீது 5000 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இதில், முதல் குற்றவாளியாக நாகேந்திரன், இரண்டாவது குற்றவாளியாகத் தலைமறைவாகவுள்ள சம்போ செந்தில், மூன்றாவது குற்றவாளியாக அஸ்வத்தாமன் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.