தமிழ்நாடு காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் நல சங்கம் கிளை தொடக்க விழா பெயர்பலகை மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு வட்டாரத்தில் பள்ளிப்பட்டு, கரிமேடு, பொதட்டூர் பேட்டை ஆகிய மூன்று கிராமங்களில் கிளை பெயர்பலகை திறப்பு மற்றும் கொடியேற்று விழா நடை பெற்றது. காட்டு நாயக்கன் பழங்குடி மக்கள் நல சங்க மாநில செயலாளர் அய்யனார் தலை மையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொது செயலாளர் இரா. சரவணன், மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, திருத்தணி வட்ட சிபிஎம் செயலாளர் வி.அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர். காட்டு நாயக்கன் பழங்குடி மக்களுக்கு சாதி சான்று குடும்ப அட்டை, ஆதார், வாக்காளர் அடை யாள அட்டை போன்றவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். மாநில தலைவர் பழனி, மாநில பொருளாளர் தயாளன் ஆகியோர் பேசினர். மாநில மகளிர் அணி தலைவர் கௌரிசசிகலா, மாநில துணை செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.