காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் (75) காய்ச்சல் காரணமாக கடந்த நவம்பர் 13-ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது மகன் திருமகன் ஈவெரா உயிரிழந்ததால், அதே தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.