tamilnadu

img

தில்லியில் இன்று தோழர் சீத்தாராம் யெச்சூரி இறுதி நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உணர்ச்சிமிகு அஞ்சலி

சென்னை, செப். 13 - தோழர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவு, முற்போக்கு அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று  தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். தோழர் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில்  வெள்ளி யன்று தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்துக் கட்சியினர் பல்லாயிரக் கணக்கில்  கலந்து கொண்ட இரங்கல் ஊர்வலங்கள் நடைபெற்றன. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, நுரையீரல் தொற்று காரணமாக, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழனன்று பிற்பகல் 3.05 மணியளவில் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி இன்று (செப்.14) புதுதில்லியில் நடக்கிறது. 

இரங்கல் ஊர்வலங்கள்

இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள், முற்போக்கு ஜனநாயக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மாதர்கள், மாணவர்கள், இளைஞர் அமைப்புக்கள் சார்பில் மாவட்டங் கள், தாலுகா மற்றும் நகரங்கள் என நாடு  முழுவதும் ஆயிரக்கணக்கான இடங் களில் இரங்கல் ஊர்வலங்கள், பேரணி கள் நடைப்பெற்று வருகின்றன. இவற்றில், இடதுசாரிகள் மட்டுமன்றி, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்களும் பங்கேற்று, மறைந்த தலைவர் யெச்சூ ரிக்கு, செவ்வணக்கமும், புகழஞ்சலி யும் செலுத்தினர். 

 சென்னையில் நடைபெற்ற நினைவேந்தல் பேரணியில் காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் ப.செல்வசிங், என்.குணசேகரன், கே.கனகராஜ், எஸ்‌.கண்ணன், கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தரராஜன் (வடசென்னை), ஆர்.வேல்முருகன் (தென்சென்னை) உள்ளிட்டு நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய தலைவர்கள்

முன்னதாக சென்னை தியாகராயர் நகரில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தோழர் சீத்தாராம் யெச்சூரி படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநி லச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்தத் தலைவர் டி.கே. ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி, பெ. சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ், என். குணசேகரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் பி. சுந்தர ராசன், பா. ஜான்சி ராணி, ஆர். வேல்முரு கன், வெ. ராஜசேகரன், இரா. சிந்தன், சுதிர் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.திமுக சார்பில் அதன் தலைவர்கள் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.  பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காங்கிரஸ் கட்சியின் மூத்தத்  தலைவர் பீட்டர் அல்போன்ஸ், த.மா.கா.  தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோ ரும் யெச்சூரி படத்திற்கு மாலை  அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத் தினர். சிஐடியு, மாற்றுத் திறனாளிகள், ஆட்டோ தொழிலாளர்கள், இன்சூ ரன்ஸ் ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரும் யெச்சூரி படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வின்போது செய்தியா ளர்களைச் சந்தித்த தமிழக தலை வர்கள், தோழர் சீத்தாராம் யெச்சூரி க்கு பலவாறாக புகழாரம் சூட்டினர்.

கோபாலகிருஷ்ண காந்தி அஞ்சலி

வியாழனன்று மாலை கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்த மகாத்மா காந்தியின் பேரனும் மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி, தோழர் சீத்தாராம் யெச்சூரி உரு வப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

பாசிசத்திற்கு எதிரான போரில்கொள்கை வீரரை இழந்தோம்

சிபிஎம் மாநிலக்குழு அலுவலகத்தில் தலைவர்கள் உருக்கம்

தோழர் சீத்தாராம் யெச்சூரிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய தலைவர்கள் கூறியதாவது:

இரா. முத்தரசன்

தோழர் யெச்சூரி ஒரு சிறந்த கம்யூ னிஸ்ட் என்கிற முறையில் நாட்டிற்காக, மக்களுக்கு தன்னையே அர்ப் பணித்துக் கொண்டார். அந்த மாவீர னுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. அவர் ஏற்றுக் கொண்ட அந்த லட்சியம் வெற்றி பெற, இந்த நாளில் அவரது பெய ரால் சபதம் ஏற்று, அதை செயல்படுத்தி, நடைமுறைப்படுத்தி வெற்றி பெறுவது தான் நாம் அனைவரும் அவருக்கு செலுத்தும் மிக சிறந்த அஞ்சலியாக இருக்கும் என்று இரா.முத்தரசன் கூறினார். 

ஜி.கே. வாசன்

தமிழகத்தில் பிறந்து சிறிது காலம்  வளர்ந்து அதன்பிறகு தேசியத் தலைவ ராக உயர்ந்த பெருமை மறைந்த தோழர் சீதாராம் யெச்சூரியைச் சாரும். அவர் தமிழ்நாட்டின் மீது அதிகம் அன்பு கொண்டவர். எங்களுடன் தமிழில் இனிமையாக பேசக்கூடிய தலைவரும் கூட. எங்களுடைய நிறுவன தலைவர் மூப்பனார் அவர்களோடு மிக நெருங்கி பழகியவர் மறைந்த யெச்சூரி. அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று ஜி.கே.வாசன் குறிப்பிட்டார். 

டி.கே.எஸ். இளங்கோவன்!

இந்திய நாட்டின் அரசியலில் மிகப் பெரிய பங்களிப்பை செலுத்தியவர் சீத்தாராம் யெச்சூரி. அவரோடு மாநி லங்களவையில் இணைந்து பணி யாற்றும் வாய்ப்பு பெற்றவன் நான். ‘பார்லிமெண்டரி’ என்ற வார்த்தைக்கு முழு தகுதியும் பெற்றவர் தோழர் யெச்சூரி மாநிலங்களவையில் பலருக்கு சிறந்த வழிகாட்டியாகவும் அவர் திகழ்ந்தார். 

அதோடு மட்டுமல்ல, எங்கள் தலை வர் கலைஞர் மீது அளவு கடந்த பற்றும், பாசமும் கொண்டவர். அதேபோல் தலை வர் கலைஞரும், தோழர் யெச்சூரியை தனது பிள்ளை போல்தான் கருதினார் என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

பீட்டர் அல்போன்ஸ்

தோழர் யெச்சூரியை, கல்லூரி நாட்கள் முதல் நான் அறிவேன். எஸ்எப்ஐ என்று சொல்லக்கூடிய இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய தலைவராக இருந்த நாளில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியக் காலத்திலும் நான் அறிவேன். அகில இந்திய அரசியலில் நடந்த ஒரு நிகழ்வை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. ஒன்றி யத்தில், தேவகவுடா தலைமையிலான ஆட்சியின்போது மிகப்பெரிய நெருக் கடி ஏற்பட்டது. அந்தக் காலக் கட்டத்தில் அன்றைய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துடன் இணைந்து நெறிப்படுத்திய யெச்சூரியின் செயல் பாடு, குறைந்தபட்ச செயல் திட்டத்தை தயாரித்து கொடுத்தது தேசிய அள வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி யது. மேலும், அன்றைக்கு தேசிய சக்தி களோடும், ஜனநாயக சக்திகளோடும் அவருக்கு இருந்த மிக நெருக்கமான தொடர்பு எல்லோராலும் மிகவும் வியந்து பாராட்டப்பட்டது. அத்தகைய மிக அற்புத மான வாழ்க்கை தோழர் யெச்சூரியின் வாழ்க்கை. தனது சுயநலத்தை பாரா மல் கொள்கைகளில் மிக உறுதியாக இருந்து இறுதி வரை ஒரு போராளி யாகவே வாழ்ந்து காட்டிய தோழர் யெச்சூ ரியின் வாழ்க்கை, எல்லோராலும் பின்பற்றப்பட வேண்டியதாகும்.

தோழர் யெச்சூரியின் மறைவு, இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய இழப்பு. மதவெறி அரசியலை மாய்ப்ப திலும், பாசிச அரசியல் முதுகெலும்பை உடைப்பதிலும் மிகப்பெரிய போர் வீரராக களத்தில் முன்னின்று பணியாற்றிய மிக அற்புதமான கொள்கை வீரர் தோழர் யெச்சூரி என்று பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிட்டார்.