tamilnadu

img

அரசியலமைப்பு சட்ட தின கொண்டாட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை,நவம்பர்.24- அரசியலமைப்பு தினம் கொண்டாட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வருகின்ற நவம்பர் 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.