பெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவம்பர் 30) பிற்பகல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் கனமழை காரணமாக, அபுதாபியில் இருந்து காலை 8.10 மணிக்கு தரையிறங்க வேண்டிய இண்டிகோ விமானம் சென்னை விமான நிலையத்தில் கனமழை காரணமாக பெங்களூரு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையம் இன்று நண்பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு வரும் விமானங்களும், சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.