சம்சவுதா ரயில் வெடிகுண்டுத்தாக்குதலில் குற்றம்சாட்டப் பட்டிருந்த அசீமானந்த் (உண்மையான பெயர் நபா குமார் சர்க்கார்) மற்றும் மூவர் விடுதலை செய்யப் பட்டிருப்பது, நம் நாட்டில் குற்றவியல் நீதி பரிபாலன அமைப்பு என்பது இந்துத்துவா பயங்கரவாதிகளை குற்றவாளிகளாக மெய்ப்பித்துத் தண்டிக்க முடியாத அளவிற்கு, தரம்தாழ்ந்த ஒன்றாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு ஓர் அவமானகரமான நினைவூட்டலாகும். 2006க்கும் 2008க்கும் இடையே, இந்துத்துவா தீவிரவாதக் குழுக்களால் ஆறு பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அசீமானந்த், பிரக்யா தாகூர் லெப்டினன்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித்ஆகியவர் இதற்கான சதிவேலைகளில் ஈடுபட்ட மிகவும் பிரபலமானவர்கள். ஆர்எஸ்எஸ்/விசுவ இந்து பரிசத் தீவிரவாதியான அசீமானந்த், இதற்கு முன்பும் இதேபோன்று மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கிலும் ஆஜ்மீர் தர்கா வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டிருந்து நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதிகளை பாதுகாக்கும் வகையில் என்ஐஏ விசாரணை
முஸ்லிம்கள் தொழுகை செய்திடும் மிக முக்கியமான இடங்களைக்குறிவைத்து, பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டவர்களில் அசீமானந்த் பிரதான அமைப்பாள
ராகக் கருதப்படுபவர். இவ்வழக்குகள் அனைத்தையும் தேசியப் புலனாய்வு ஏஜென்சி (NIA-National Investigation Agency) புலன்விசாரணை செய்தது. மோடியின் ஆட்சியின் கீழ், தேசியப் புலனாய்வு ஏஜென்சி, இந்துத்துவா பயங்கரவாதிகள் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளையும் அவற்றில் குற்றம்சாட் டப்பட்டவர்களையும் பாதுகாக்கும் முறையிலேயே விசாரணையை நடத்தியது. 2017இல் நடைபெற்ற மெக்கா மசூதி வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்தில் ஒன்பது பேர் கொல் லப்பட்டார்கள். அசீமானந்த் உட்பட இதில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப் பட்டார்கள். தேசியப் புலனாய்வு ஏஜென்சியால் விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்த ஆஜ்மீர் தர்கா வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டிருந்த அசீமானந்த் மற்றும் ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டார் கள். இந்த வழக்கில் மட்டும்தான் ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்கள் இருவர்
தண்டிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்கள். எனினும், அவர்கள் தண்டனையை உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
மென்மையாக நடந்து கொள்ள நிர்ப்பந்தம்
2008இல் நடைபெற்ற மலேகான் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்கைப்பொறுத்தவரை, இவ்வழக்கில் மகாராஷ்ட்ரா ஸ்தாபனப்படுத்தப் பட்ட குற்றங்கள் கட்டுப்பாடு (MCOCA-Maharashtra Control of Organised Crime Act)சட்டத்தின்கீழ் பிரக்யா தாகூருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை தேசியப் புலனாய்வு ஏஜென்சியானது கைவிட்டுவிட்டது. ஆயினும், வழக்கை விசாரித்து வந்த சிறப்பு நீதிமன்றம், அவருக்கு எதிராக சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (UAPA-Unlawful Activities Prevention Act) கீழ் விசாரணையைத் தொடர்ந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த பிரக்யா தாகூர், ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோரை வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்திடும் விதத்தில்
மென்மையாக நடந்துகொள்ளுமாறு தனக்கு நிர்ப்பந்தம் அளிக்கப்பட்டதாக இவ்வழக்கில் ஆஜரான அரசு வழக்குரைஞர் ரோகிணி சாலியன் நீதிமன்றத்தில் முறையிட்டதைத் தொடர்ந்து தேசியப் புலனாய்வு ஏஜென்சியின் இழிசெயல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. பிரக்யா தாகூர், புரோகித் ஆகியோருக்காக நீதிமன்றத்தில் பிணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட சமயத்தில், தேசியப் புலனாய்வு ஏஜென்சி அவற்றை எதிர்த்திடவில்லை.
சாட்சியங்கள் இருந்தும்...
சம்சவுதா ரயில் வெடிகுண்டுத் தாக்குதல் பயங்கரவாதிகள் மேற் கொண்ட சம்பவங்களில் மிகவும் கொடூரமான ஒன்றாகும். இதன்மீது இப்போது நீதித்துறையின் தீர்ப்பு வெளிவந்திருப்பதன்மூலம், இந்தப்பயங்கரவாத நடவடிக்கை தொடர்பாகவும் யாரையும் பொறுப்பாக்க முடியாது என்ற செய்தி தெரிவிக்கப் பட்டிருக்கிறது. உண்மையில், இந்தத்
தாக்குதல் தொடர்பாக ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் இருந்தார்கள் என்பதற்குப் போதுமான சாட்சியங்கள் இருந்தன. இந்த வழக்கை, ஆரம்பத்தில் ஹரியானா
காவல்துறையினரின் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் விசாரித்தபோது, ரயிலில் வெடிக்காத குண்டுகளின் பல்வேறு பாகங்களையும் அவற்றை இந்தூரில் வாங்கிய நபர்களையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். குண்டுகள் வைத்திருந்த சூட்கேசில் இருந்த பெயரை வைத்து, நகரத்தில் அந்தக் கடையைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அங்கே பணியாற்றிய ஊழியர்கள் இந்த குண்டுகளை வாங்கிய இரு நபர்களையும் அடையாளம் காட்டியிருக்கிறார்கள். இவ்வாறு இந்துத்துவா பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் அனைத்துமே ஒரேவிதமாகத்தான் நடத்தப்பட்டிருக்கின்றன. மிகவும் சொதப்பலான விசாரணை, நீதிமன்றத்தில் சாட்சிகள் விசாரிக்கப் படும்போது பிறழ்சாட்சிகளாக மாறுதல், வழக்கு விசாரணையை நடத்துவதில் தேசியப் புலனாய்வு ஏஜன்சியின் அசிரத்தை என்ற விதத்திலேயே அனைத்து வழக்கு விசாரணைகளும் நடைபெற்றன.
பாஜக அரசின் ஏவலாளாக...
மெக்கா மசூதி வழக்கிலும் அதேபோன்று ஆஜ்மீர் தர்கா வழக்கிலும் நீதிமன்றங்களால் அசீமானந்த் விடுதலை செய்யப்பட்டபோது, அவற்றுக்கு எதிராக தேசியப் புலனாய்வு ஏஜன்சி(என்ஜஏ) மேல்முறையீடு செய்திடவில்லை. இப்போது வெளிவந்துள்ள சம்சவுதா ரயில் விபத்து வழக்கிலும் (இதில் 43 பாகிஸ்தானியர் உட்பட 68 பேர் கொல்லப்பட்டார்கள்) குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டிருப்பதற்கு எதிராக மேல்முறையீடு எதுவும் மேற்கொள்ளமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியிருக்கிறார். இது பாஜக அரசாங்கத்தின் அரசியல் சார்புத்தன்மையை அப்பட்டமாகக் காட்டுகிறது. இதன் மூலம் பாகிஸ்தான் அரசாங்கம், இத்தகைய “நீதித்துறையின் போலித்தனத்திற்கு” எதிராக, எதிர்ப்பைப் பதிவு செய்வதற்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்துத்துவா பயங்கரவாதத்தை பாதுகாக்கும் பாஜக அரசு
சம்சவுதா, மாலேகான், மெக்காமசூதி மற்றும் ஆஜ்மீர் ஷெரீப் வெடிகுண்டுத் தாக்குதல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டிருப்பது காட்டுவது
என்ன? இந்துத்துவா தீவிரவாதிகளால் பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டன என்பதை மோடி அரசாங்கம் அங்கீகரிக்காது அல்லது
ஏற்றுக்கொள்ளாது என்பதேயாகும். மோடி அரசாங்கத்தைப் பொறுத் தவரை, பயங்கரவாதம் என்றால் அது முஸ்லீம் தீவிரவாதிகளால் மட்டுமே மேற்கொள்ளப்படும் ஒன்றாகும். நிச்சயமாக இந்து பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்படாது என்பதாகும். நம் நாட்டின் குற்றவியல் நீதிபரிபாலன அமைப்பு இந்தத் திசைவழியில் தன்னைத் தரம்தாழ்த்திக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது என்பதையே இரத்தத்தை உறையவைத்திடும் இத்தகைய செய்தி நமக்குத் தெரிவிக்கிறது.
(மார்ச் 27, 2019)
(தமிழில்: ச. வீரமணி)