பெங்களூரு
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று (ஞாயிறு) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மணிப்பால் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவுக்கு மட்டுமல்லாமல் அவரது மகள் பதமாவதிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மகனுக்கு கொரோனா பாதிப்பு இல்லையென்றாலும் அவரை தனிமையில் வைக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், எடியூரப்பா (முதல்வர்) அலுவலகத்தில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.