சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் தற்காலிக உரிமம், மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க-சீனா இடையே வர்த்தக போர் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறி சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தடை செய்தது. மேலும் அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைத் தொடர்பு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இருப்பினும் கடந்த மே 20-ஆம் தேதி ஹூவாய் நிறுவனத்துக்கான உரிமத்தை தற்காலிகமாக முதலில் 3 மாதங்களுக்கு அமெரிக்க வர்த்தகத் துறை நீட்டித்தது. பின்னர் ஆகஸ்ட் 19-ஆம் தேதி 2ஆவது முறையாக 3 மாதங்களுக்கு நீடித்தது. இந்நிலையில், 3ஆவது முறையாக ஹூவாய் நிறுவனத்துக்கான உரிமத்தை 3 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டு பிப்ரவரி 16-ஆம் தேதி வரை அமெரிக்க வர்த்தக துறை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.