செங்கல்பட்டு,ஜன.5 ஈசூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சுடுகாட்டிற்கு இடம்கேட்டு சாலை மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டத்திற்குட் பட்ட ஈசூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிரா மத்தில் சுடுகாடு இல்லை என்பதால். இறந்தவர்களின் உடலை அருகில் உள்ள பாலாற்றில் புதைத்து வருகின்றனர். பாலாற்றில் புதைக்கப்படும் இடத்திற்குச் செல்வதற்கும் சாலை வசதி இல்லாததால் விவசாய நிலங்களின் வழியாகவே இறந்தவர்களின் உடலை சிரமப்பட்டு எடுத்துச் செல்கின்றனர். மேலும் பாலாற்றில் மணல் பகுதி யில் உடலை புதைப்பதால் யாரும் கல்லறை கூட கட்டுவது கிடையாது. ஆற்று மணலில் அதிக அழம் குழி எடுக்க முடியாது என்பதால் இரண்டு அடியில் புதைப்ப தும் மழை நேரங்களில் புதைக்கவே முடியாத நிலை உள்ளது. முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு
இக்கிராமத்திற்கு சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என ஈசூர் கிரா மத்தைச் சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாவட்ட பொரு ளாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டக்குழு உறுப்பினராக வும் மக்கள் பணியாற்றிவந்த நாகேஷ் நீண்ட காலமாகப் போராட்டம் நடத்தி வந்தது டன் மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு என பல இடங்களுக்கு மனு கொடுத்தும் பல போராட்டங் களை நடத்திவந்துள்ளார்.
போராடியவர் காலமானார்
கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் நாகேஷ் கடந்த வியாழனன்று இரவு காலமானார். இந்நிலையில் இவரின் உடலையும் விவசாய நிலங்கள் மூலமாகவே எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டதால் கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியுடன் இணைந்து சுடுகாட்டிற்கான உரிய இடத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று மது
ராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டச் செயலாளர் கே.வாசுதேவன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தால் சுமார் மூன்று மணிநேரம் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட் டது.
அதிகாரி வாக்குறுதி
தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் துணை வட்டாட்சியர் கோபி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். மேலும் சுடுகாடு பிரச்சனை குறித்து ஆய்வு செய்து கிராமத்தில் சுடுகாட்டிற்காக புதிய இடம் ஒதுக்கித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறு தியளித்தார் இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சுடுகாடு கேட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தோழர் நாகேஷ் இறந்த பிறகும் சுடுகாட்டிற்காகப் போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தோழரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.