tamilnadu

img

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியருக்கு வழங்குவது போல் 1ஆம் தேதியே பென்ஷன் வழங்க வேண்டும், 13ஆவது ஊதிய ஒப்பந்தப்படி 2.44 விழுக்காடு உயர்வு அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஓய்வூதியர் சங்கம் சார்பில் வேலூர் மண்டல அலுவலகம் முன்பு மண்டலத் தலைவர் பக்தவச்சலம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் கோவிந்தசாமி, லோகநாதன், அர்ஜுனன், மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

;