வேலூர், ஜூன் 1-வேலூர் மாவட்டம் திருப் பத்தூர் தூய நெஞ்சக் கல் லூரியின் தமிழ்த் துறை போராசிரியர் க.மோகன் காந்தி, ஆங்கிலப் பேராசிரியர் வ.மதன், காணிநிலம் மு.முனிசாமி ஆகியோர் வாணியம்பாடி அருகே மேற் கொண்ட கள ஆய்வில் சோழர் காலத்தைச் சேர்ந்த நடுகல்லைக் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் கூறுகையில்,“வாணியம்பாடியிலிருந்து நாட்டறம் பள்ளிக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நெக்குந்தி கிராமம் உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள காட்டுப்பகுதியில் கி.பி. 10-11-ஆம் நூற் றாண்டைச் சேர்ந்த நடுகல் உள்ளது. இதன் காலத்தை வைத்து கணக்கிடுகையில் இது, சோழர் காலத்தைச் சேர்ந்ததாகக் கருத முடிகிறது” என்றார்.1.5 அடி உயரம் மண்ணில் புதைந்த நிலையில், 2 அடி உயரம் மேலே தெரிந்த நிலையில் உள்ளது. 3 அடி அகலம் கொண்ட பலகைக் கல்லில் இந்த நடுகல் செதுக் கப்பட்டுள்ளது. உருவம் தேயாமல் நேர்த்தியான வடிவில் உள்ளது. இக்கல்லில் உள்ள வீரன் வலது புறம் கொண்டையிட்டு, கையில் வில், அம்புடன் உள்ளார். காதுகளில் காதணிகள், முதுகுப்புறம் அம்புக் கூடு காணப்படுகின்றன. கைகளில் வீரக் கடகங்களும் உள் ளன. இந்த நடுகல்லை இப் பகுதி மக்கள் வேடியப்பன் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.