காஞ்சிபுரம், ஜன. 11- காஞ்சிபுரத்தில் அரசு உதவி பெறும் தண்டபாணி ஓரியண்டல் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி தலைமையில் புகையில்லா போகி விழிப் புணர்வு பேரணி சனிக்கிழமை (ஜன. 11) நடத்தினர். சுற்றுச்சூழலை பாது காப்போம், பிளாஸ்டிக், டயர் போன்ற பொருட் களை எரிக்க வேண்டாம், சாலையின் மையப்பகுதி யில் போகி பொருட்களை எரிக்காமல் சாலையின் ஓரத்தில் எரிக்க வேண்டும் என்ற பதாகைகளுடன் காஞ்சிபுரத்தின் முக்கிய வீதிகளில் சென்றனர், சுற்றுச்சூழலை பாது காக்கும் வகையில் பிளாஸ் டிக் பொருட்களை தீயில் எரிக்க மாட்டோம் எனவும் உறுதிமொழி ஏற்றனர். இதில் பசுமைப்படை ஒருங் கிணைப்பாளர் விஜயகுமார் உள்ளிட்ட 500க்கும் மேற் பட்ட மாணவர்கள், கலந்து கொண்டனர்.