tamilnadu

img

13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை, அக். 11- தமிழகத்தில் 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கோவை, ஈரோடு,நீலகிரி சேலம்,தருமபுரி கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான  மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.