சென்னை,ஜன.18- தஞ்சை பெருவுடையார் கோவில் திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெற விருக்கும் தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழாவை, தமிழ் வழிபாட்டு முறையில் நடத்த வேண்டுகோள் விடுத்து, தஞ்சைப் பெரியகோவில் உரிமை மீட்புக்குழுவின் மாநாடு நடைபெற வுள்ளது.
இம்மாநாடு முன்வைத்திருக்கும் கோரிக்கை அனைவருடைய கவ னத்திற்குமா னது எனக் குறிப்பிட்டு அறிக்கை விடுத்துள்ள ஸ்டாலின், அம்மாநாடு வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தொல்தமிழர் பண்பாட்டு அடையாளங்களை மீட்கும் முயற்சிக்கான போராட்டங்கள் காலந்தோறும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்வதாக கூறியுள்ள ஸ்டாலின், இந்த மாநாட்டின் கோரிக்கையை அதிமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.