டெஹ்ரான், ஜன. 13- ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் போர்ப்பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில் இராக்கில் உள்ள அமெரிக்கப் படையினரைக் குறிவைத்து மீண்டும் ராக்கெட் தாக்கு தல் நடத்தப்பட்ட சம்பவம் வளைகுடா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானின் முக்கியத் தளபதியான காசிம் சுலைமானியை ஜனவரி 5 அன்று அமெரிக்கா குண்டு வீசிக் கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இராக்கில் உள்ள அமெரிக்கப் படை கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்கு தல் நடத்தியது. இதில் 80 பேர் கொல்ல ப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில் அமெரிக்கா அதற்கு மறுப்புத் தெரி வித்தது. இருநாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் உச்சத்தில் இருந்த நிலையில் அமெரிக்காவின் குண்டு வீச்சு விமானம் என நினைத்து, உக் ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் 176 பயணிகள் உயிரிழந்தனர். இதனால் மன்னிக்க முடியா பெரும் தவற்றைச் செய்து விட்டதாகக் கூறிய ஈரான் ஜனாதிபதி ஹசான் ருஹானி மன்னிப்புக் கோரினார்.
இந்த நிலையில் ஜனவரி 12 ஞாயிறு இரவு இராக்கில் அமெரிக்கப் படையினர் மீது மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலை நகர் பாக்தாத்தின் வடக்கே உள்ள அல் பலாத் விமான படைத் தளம் அமைந்துள்ளது. இங்கு அமெரிக்கா வின் எப்16 ரக விமானங்களை பழுது நீக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் 8 கத்யுஷா வகை ராக்கெட்டுக்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈராக்கைச் சேர்ந்த இரு அதிகாரிகள் மற்றும் இரு விமானிகள் என 4 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒப்பந்த அடிப்படையில் தாங்கள் இந்த விமானப்படைத் தளத்தை பயன்படுத்தி வந்ததாகக் கூறும் அமெரிக்கா தங்கள் நாட்டு வீரர்கள் யாரும் இதில் காயமடையவில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் ஈராக்கில் இயங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.