tamilnadu

img

காலமுறை ஊதியம் கோரி தொழிலாளர்கள் போராட்டம்

இராமநாதபுரம், டிச.9- இராமநாதபுரம் மாவட்ட சிஐ டியு உள்ளாட்சி ஊழியர்  சங்கத் தின் சார்பில் நைனார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு துப்புரவு தொழிலாளர்,  உள்ளாட்சி ஊழியர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கக் கோரி காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது.  இதற்கு சங்க நிர்வாகி ராம லிங்கம் தலைமை வகித்தார். நாக லிங்கம் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் சிவாஜி, சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் அய்யாதுரை, சந்தானம், கணேசமூர்த்தி, ஒன் றிய நிர்வாகிகள் ஹைதர் அலி, பிரான்சிஸ், சேதுராமன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். போராட்டத்தில், துப்புரவு தொழிலாளர் மற்றும் உள்ளாட்சி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதி யக்குழு ஒப்பந்தப்படி 2017 முதல் வழங்கவேண்டிய நிலுவைத் தொகை மற்றும் கருணைத் தொகை ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம், ரூ.2  ஆயிரம் வழங்க வேண்டும், 2010ல் இருந்து பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு காலமுறை ஊதி யம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி, சங்க நிர்வாகிகள் அய்யாதுரை, சந்தானம், கணேசமூர்த்தி, பிரான் சிஸ் உள்ளிட்டோர் வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் நடத்திய  பேச்சுவார்த்தையில் 15 நாட்க ளுக்குள் கோரிக்கைகளை நிறை வேற்றி தருவது என எழுத்துப் பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது.