tamilnadu

img

இந்தியாவிற்கும் இதே நிலை வருமா? - சிதம்பரம் இரவிச்சந்திரன்

லிமா. இந்த முறை கிளாஸ்கோவில் காலநிலை உச்சிமாநாடு நடந்துகொண்டிருந்த நேரம். தென்னமெரிக்க நாடான பெருவிலிருந்து அந்த செய்தி வந்தது. அங்கு உள்ள புகழ்பெற்ற கோர்டிலியேரா ப்ளாங்கா மலையில் யானபாச்சா பனிப்பாறை பெரிய அளவில் உருகுகிறது என்ற செய்தி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. முன்பு அந்த பனிப்பாறையில் இருந்து ஒரே ஒரு அருவி மட்டுமே உற்பத்தியானது. இன்று அது ஆறேழாக அதிகரித்திருக்கிறது.

அன்று மகிழ்ச்சி வெள்ளம்!  இன்று சோகக்கதை! 

ஒரு சில ஆண்டுகளுக்கு முந்தான் மக்கள் இந்தப் பனிப்பாறை உருகுவதை கவனிக்கத் தொடங்கினர். தாராளமாக நீர் கிடைத்ததால் இதை எவரும் பெரிதாகக் கருதவில்லை. அங்கு வாழ்ந்த மக்களுக்கு இது வறண்டுபோன பூமியில் விவசாயம் செய்யக் கிடைத்த வரமாக அமைந்தது. பலதரப்பட்ட பயிர்களை மக்கள் பயிரிட்டு வளர்க்கத் தொடங்கி னர். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய அளவிற்கு அமோக விளைச்சல் கிடைத்தது.

பெருவெள்ளப்பெருக்கில் மூழ்கும் நகரம்

சமீபகாலத்தில் இதே பனிப்பாறையில் இருந்து உருகிவரும் நீரின் அளவு கட்டுக்கடங்காமல் அதி கரித்திருக்கிறது. இதன் மூன்றில் ஒரு பகுதியும் கடந்த பத்தாண்டில் உருகி ஓடிவிட்டது. இதற்கிடையில் பெருவில் இந்தப் பனிப்பாறையை நம்பி ஒரு விவசாயக் கலாச்சாரமே உருவாகி விட்டது. இதைச் சார்ந்தே இன்று இங்கு வாழும் மக்களின் வயிற்றுப் பிழைப்பு நடக்கிறது.

நீர்ப் பஞ்சம்

இங்கிருந்தே நகரங்களுக்கு குடிநீர் விநியோ கம் நடைபெறுகிறது.ஆனால் இங்கு மட்டும் இல்லாமல் இதே நிலை பூமியில் எல்லா இடங்க ளிலும் தொடர்ந்தால் 2050 ஆவதற்குள்உலகில் இன்றுள்ள பனிப்பாறைகளில் பெரும்பாலானவை உருகி காணாமல் போய்விடும். பெருவின் யானா பாச்சா பனிப்பாறை உருகுவது உலகில் அனைவ ருக்கும் விடுக்கப்படும் தீவிரமான ஒரு முன்னெச்ச ரிக்கை.

உருகியோடும் கோடிகள்

இதன் மூலம் இயற்கை, காலநிலை மாற்றம் மக்கள் வாழ்க்கையை மட்டும் அல்ல நாடுகளின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்ற ஆபத்தான முன்னறிவிப்புச் செய்கிறது. இன்று உலகில் பல இடங்களில் இருக்கும் பனிப்பாறைகள் உருகி மறைந்து கொண்டிருக்கின்றன. பனி மலைகளை மூடியிருக்கும் பனி பெருமளவில் உருகி ஓடுகிறது. இவ்வாறு உருகுவது வெறும் தண்ணீர் மட்டும் இல்லை. பணம்! அதுவும் கோடிகள்!

பனிப்பாறைகள் என்றால் என்ன?

பல ஆண்டுகளாக பனி பெய்து உருவாகும் பெரிய மலைகளே பனிமலைப்பாறைகள். இவை தங்கள் எடை காரணமாக சிறிய அளவில் நகர்ந்து கொண்டிருக்கும். கொளுத்தும் கோடையில் கூட  இவை முழுமையாக உருகுவதில்லை. இவற்றில் சிலவற்றிற்கு பெரிய தடாகங்கள் அளவு நீரை சேமிக்கமுடியும். பல நேரங்களில் வெளிப்பார்வை க்கு பனிக்கட்டி போலக் காணப்பட்டாலும் இவை உள்ளே பனிக்கட்டியும் நீரும் கலந்த நிலையில் இருக்கும். இவற்றில் பல இன்று அழிந்துக் கொண்டிருக்கின்றன.

இதற்குக் காரணம் மாசுபடுதல், புவி வெப்ப உயர்வு, காலநிலை மாற்றம். என்றாலும் இதற்கு மற்றொரு காரணம் நாம் வெளியிடும் புகையில் உள்ள தூசுக்கள். கார்பன் டை ஆக்சைடு வாயு மண்டலத்தின் வெப்பநிலையை உயர்த்துவதுடன் புகையில் கலந்திருக்கும் தூசுகள் பனி மலைகள், பனிப்பாறைகளை மோசமாக பாதிக்கின்றன. இதனால் பனிப்பாறைகள் நேரடியாக காற்றில் அதிகரிக்கும் கார்பன் டை ஆக்சைடை எதிர்கொள்வ துடன் கார்பன் அதிகரிப்பால் ஏற்படும் அழிவையும் சந்திக்க நேரிடுகிறது. பனி மூடிய கனமான கவசத்து டன் உள்ள பனி மலைகளில் வாகனங்கள் ஓடுவது குறைவாக இருக்கும் என்பதால் இதுபோன்ற தூசுக்கள் உருவாக வாய்ப்பு குறைவு. இதனால் மாசு படுதல் இப்பகுதிகளில் குறைவாக இருக்கும் என்று கருதப்பட்டது.

சிகரங்களை சிதைக்கும் தூசுக்கள்

ஆனால் இந்த கருத்து தவறு என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியா போல புதைபடிவ எரிபொருட் களை அதிகம் சார்ந்திருக்கும் நாடுகளில் வெளியி டப்படும் புகையில் கார்பனின் அம்சம் அதிகமாகக் காணப்படுகிறது. இது காற்று மண்டலத்தில் மேலெ ழும்பிச் சென்று துருவப்பகுதிகள் மற்றும் இமய மலை போன்ற பனி மலைகளில் தரையிறங்கு கின்றன. இந்தியாவில் இருந்து உருவாகும் புகை இங்குள்ள வெப்பக்காற்றுடன் சேர்ந்து துருவப்பிரதேசங்களுக்கு பயணம் செய்கிறது. குளிர்ச்சியான சுற்றுப்புறத்திற்குச் செல்லும் போது காற்றின் அடர்த்தி அதிகரிக்கும். இந்த பாரம் தாங்காமல் காற்றில் கலந்திருக்கும் தூசுக்கள் கீழ்நோக்கி செல்கின்றன. இவை பனிக்கட்டியை மூடி யுள்ள பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன. இதனால் பனிக்கட்டியின் இயல்பான தன்மை மாறுகிறது. இத்தகைய மாசுக்கள் கலந்த பனிக்கட்டியில் உயர்ந்த வெப்பநிலை நிலவுகிறது. சாதாரண பனிக்கட்டியில் இருப்பது போல இல்லாமல் வெப்பநிலை இவற்றில் மிக அதிகமா கக் காணப்படுகிறது. சிறிய வெப்ப உயர்வு ஏற்பட்டால் கூட பனிக்கட்டி உருக ஆரம்பிக்கும். மீண்டும் குளிர்காலம் வரும்போது இவற்றின் உள்ளமைப் பில் இதே தூசுக்கள் பிரச்சனையை ஏற்படுத்துகின் றன. உள்ளுக்குள் இருக்கும் நீர் பனிக்கட்டியாக மாறாமல் வெளியில் மட்டும் பனிக்கட்டி உருவாகி றது. இதனால் இந்த பனிக்கட்டிகளின் எடை குறைகிறது.

உடையும் பனிப்பாறைகள்

இதனால் இவை எளிதில் உடைந்து தனியாகப் பிரிய வாய்ப்பு அதிகம். வலிமை இல்லாத பனிக்கட்டி கள் அவை ஒட்டிக்கொண்டிருக்கும் பாறைகளில் இருந்து பெயர்ந்து உடைந்து உருகுவது பேரிடர்கள் ஏற்படக்காரணமாகிறது. பல சமயங்களிலும் இது போன்ற பேரிடர்கள் மலைகலில் இருந்து பாறை கள் மற்றும் மண் சரிந்து ஏற்படும் அழிவை விட அதிக அழிவை ஏற்படுத்துகின்றன.

பனிப்பாறைகள் வெறும் பாறைகள் அல்ல அத்தனையும் பணம்!

உலகில் பனிமலைகள் காணப்படும் எல்லா இடங்களும் பெருமளவு சுற்றுலா வாய்ப்புள்ள இடங்கள். இந்த இடங்களில் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பது அங்கிருக்கும் பனி மலைகளும், அதனு டன் தொடர்புள்ள சுற்றுலா செயல்களுமே. பனிச் சறுக்கு விளையாட்டு முதல் ஒரு நீண்ட சுற்றுலாப் பொழுதுபோக்கு செயல்பாடுகள் பனிப்பாறைகளை யும், பனி மலைகளையும் சார்ந்தே நடைபெறு கின்றன.

பசித்த வயிற்றிற்கு சோறு போடும் பனிப்பாறைகள்

இந்தியாவில் லடாக் போன்ற இடங்கள் சுற்றுலா முக்கியத்துவம் பெற இந்தப் பனிப்பாறைக ளும் பனிமலைகளுமே காரணம். இந்த இடங்களில் இருக்கும் பனியும், குளிரும், நிறமும், அற்புத இயற்கைக் காட்சிகளுமே சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன. இவர்கள் செலவிடும் பணம் இத்த கைய இடங்களின் பொருளாதாரத்தை மட்டும் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையே தாங்கி நிறுத்துகிறது. பெரிதாக விவசாயம் என்று எதுவும் நடை பெறாத பனி மலைகளில் மனிதர்கள் ஏன் வாழ்கின் றனர்? பனிப்பொழிவின் அழகுதான் காரணம். பனியும், பனி மலைகளும், பனிப்பொழிவும் இல்லாத இடங்களில் வாழ்பவர்கள் அவ்வப்போது இந்த இடங்களுக்கு வருகின்றனர். பனியும், பனிப் பாறைகளும் எல்லோரையும் கவர்ந்திழுத்து அந்தப் பிரதேசத்திற்கு வருமானத்தை  ஈட்டித்டருகிறது.

பனிப்பாறைகளில் இருந்து மின் உற்பத்தி வருமானம்

பனிப்பாறைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியுமா? முடியும். துருவப்பகுதிகளில் இருக்கும் பனிப்பாறைகள் தவிர மற்ற இடங்களில் இருப்ப வை கோடைகாலத்தில் சிறிதளவேனும் உருகி குளிர் காலத்தில் மீண்டும் பழைய நிலைக்கு வருபவை. இவை தமக்குள் அடக்கிவைத்திருக்கும் நீர் நதிக ளில் ஓடும் நீரின் அளவிற்கு இருக்கும். ஆனால் இது வேகமாக ஓடிப் போய்விடாது. இத்தகையவை உயரமான இடங்களிலேயே அதிகம் காணப்படு கின்றன. இதனால் இங்கு உயரத்தில் தேக்கிவைக்கப் பட்டிருக்கும் நீரைப் பயன்படுத்தி நீர் மின்நிலை யங்களை இயக்கமுடியும். இந்தியா உட்பட பல நாடுகளும் இந்த வழியைப் பின்பற்றி மின்னாற்ற லைத் தயாரிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் உத்தரகண்ட்டில் உருவான பெருவெள்ளத்தில் இதுபோல கட்டப்பட்டுக்கொண்டிருந்த ஒரு நீர்மின்நிலையம் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது.

பனிப்பாறைகளின் நீர்மின்நிலையங்கள்

சாதாரண நீர்மின்நிலையங்கள் போல் இல்லா மல் பனிப்பாறைகளைப் பயன்படுத்தி இயங்குபவை  வேறுபட்டவை. மற்ற நிலையங்கள் போலவே இவை  செயல்படுகின்றன என்றாலும் இவற்றில் வந்து சேரும் நீர் ஒரே அளவில் இருக்கும். மழைக்காலத் தில் நீரைத் தேக்கிவைத்து கோடைகாலத்தில் அதைப் பயன்படுத்த வேண்டியதில்லை. கோடை யிலும் பனி உருகி நீர் கிடைக்கும். இவற்றை அமைக்கச் செலவு குறைவு.

பனிமலைகள் காணாமல் போகுமா?

இவற்றின் எண்ணிக்கை மற்றும் அளவு குறை வதை சுட்டிக்காட்டுகின்றன. துருவப்பகுதிகள் தவிர உலகில் உள்ள பனிப்பாறைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. 1880களுடன் ஒப்பி டும்போது உலகில் இன்று 80 சதவீத பனிப்பாறை களும் அழிந்துவிட்டன. இவற்றில் பல மலைகளும், பாறைகளும் கோடைகாலத்தில் மட்டுமே உருகி ஓடுகின்றன. இவற்றின் நீர் சேர்த்துவைக்கும் திறன் குறைந்துகொண்டிருக்கிறது. உருகி ஓடும் இந்த நீர் கடலில் போய்ச்சேர்கிறது. இதனால் பூமியின் எடையில் சமநிலை மாறுகிறது. சில பகுதிகளில் பூமியின் எடை குறைகிறது. இது தீவிர இயற்கைப் பேரிடர்கள் உருவாகக் காரண மாகிறது. அதிதீவிர வெப்பத்தால் பனிப்பாறைகள் உருகுகின்றன. பிறகு இவை குளிர்காலம் வரும் போது பழையநிலைக்கு வருவதில்லை. கெட்டி யான பனிக்கட்டிகள் உருவாவதில்லை. இதனால் பனி மலைகள் பலவீனமடைகின்றன. வாயு மண்டலத்தில் ஒரு டிகிரிக்கும் அதிகமான வெப்ப உயர்வு ஏற்படுவதால் பனி உருகி ஓடும் வேகமும் அதிகரிக்கிறது. பூமியின் எடை குறை வது தொடர்ச்சியான மண் சரிவு, பெருவெள்ளப் பெருக்கு போன்றவற்றிற்குக் காரணமாகிறது. பூமியின் அச்சு குறிப்பிட்ட கோணத்தில் சரிந்திருப்ப தால் இன்று நமக்கு பகலும் இரவும் வந்துபோகிறது. எடை மாறுவதால் இதிலும் மாற்றங்கள் ஏற்படலாம்!

இந்தியாவிலும் பனிப்பாறைகள்

இமயமலையில் உள்ள சியாச்சின் உலகின் மூன்றாவது துருவம் என்று அழைக்கப்படுகிறது. துருவப்பகுதிகள் தவிர்த்து உலகில் இது இரண் டாவது பிரம்மாண்டமான பனிப்பாறைப்பகுதி. ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட், அருணாசலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய இடங்களில் சிறிதும் பெரிதுமாக பல பனிப் பாறைகள் உள்ளன. இவற்றில் பல அழிவின் விளிம்பில் உள்ளன. இமயமலைப்பகுதியில் தொடர்ச்சியாக ஏற்படும் இயற்கைப் பேரிடர்கள், வாயு மண்டல வெப்ப உயர்வு ஆகியவை இவை அழியும் வேகத்தை அதிகரிக்கின்றன. இதே நிலை நீடித்தால் பெருவில் இன்று ஏற்பட்டுள்ல நிலைதான் நாளை நமக்கும் ஏற்படும். 

;