tamilnadu

img

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுக்கோட்டை, டிச.24 - தந்தை பெரியாரின் 48-ஆவது  நினைவு தினத்தையொட்டி புதுக்கோட் டையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் வெள்ளிக்கிழமை அணி வித்து மரியாதை செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் எம்.ஜியாவுதீன் தலை மையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி. அன்புமணவாளன், சு.மதியழகன், நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் துரை. நாராயணன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் டி.சலோமி, மாணவர் சங்க  மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்த னன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலை முக்கத்தில் உள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரி யார் சிலைக்கு பல்வேறு கட்சிகள்,  அமைப்புகள் சார்பில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. திரா விடர் கழகம் மாநில பொதுக்குழு உறுப்பினர் அரு.நல்லதம்பி தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் எம்.இந்துமதி, ஏ.வி.குமாரசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், அமைப்பு களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட னர்.  தமுஎகச தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை தமுஎகச கிளை சார்பில் பெரி யார் சிலைக்கு கிளை தலைவர் முருக.  சரவணன் தலைமையில் மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது.  தமுஎகச மாவட்டச் செயலாளர் விஜய குமார் முன்னிலை வகித்தார். கிளை செய லாளர் மோரிஸ் அண்ணாதுரை வர வேற்றார். தமிழ் ஆசிரியர் தமிழவன் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்தார்.

;