tamilnadu

img

பி.ஆர் திருவுருவச்சிலைக்கு சு.வெங்கடேசன் எம்.பி மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரரும், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும், இந்திய தொழிற்சங்க இயக்கத்தின் புகழ்பெற்ற தலைவருமான தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நினைவு நாளில் மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உடன் மாவட்ட செயலாளர்கள் இரா.விஜயராஜன், சி.ராமகிருஷ்ணன் மாவட்ட தொழிற்சங்க தலைவர்கள் அரவிந்தன், தெய்வராஜ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கு.கணேசன், ரமேஷ், இரா.லெனின், எம்.பாலசுப்ரமணி, நரசிம்மன், சசிகலா, ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.