tamilnadu

img

அறிவியல் கதிர் - ரமணன்

தேனீக்களுக்கு தடுப்பூசி!

அமெரிக்காவில் தேனீக்களை ஒருவகை பேக்டீரியாக்கள் தாக்கி ஃபவுல் புரூட்(foulbrood) எனும் நோயை உண்டாக்குகின்றன. இதை  தடுப்பதற்காக டலான் விலங்கு நல நிறுவன (Dalan Animal Health)  ஆய்வாளர்கள் தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெற்ற உலக தடுப்பூசி மாநாட்டில் இது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பூச்சி களுக்கான முதல் தடுப்பூசி இது என்று சொல்லப்படுகிறது. இந்த பேக்டீரி யாக்கள் நேரடியாக வளர்ந்த தேனீக்களை தாக்குவதில்லை.  தேனீக்கூட்டில் ஸ்போர்கள் எனும் உறையை உண்டாக்கி லார்வா புழுக்களை அழித்துவிடுகின்றன. இந்த உறைகள் 50 வருடம் வரை நிலைத்தி ருக்கும். எனவே தேனி வளர்ப்போர் தேனிக்கூட்டையே அழிக்க வேண்டும்.  இந்த தடுப்பூசி தேனீக்களை காப்பாற்றுவதோடு தேனி வளர்ப்போரின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும். அவர்கள் எதிர்பாராத இன்னொரு நன்மையும் இந்த தடுப்பூசியால் விளைந்தது. பேக்டீரியாவிற்கு தொடர்பில்  லாத இன்னொரு வைரசின் தாக்குதலுக்கு தடுப்பூசி போடப்பட்ட கூடுகள்  மற்ற கூடுகளைவிட குறைவான அளவிலேயே உள்ளாயின. இந்த ஆய்வில்  பேக்டீரியா எதிர்ப்பு மருந்து தடுப்பூசி மூலம் செலுத்தப்படவில்லை.  வெப்பம் மூலம் கொல்லப்பட்ட பேக்டீரியாக்கள் சர்க்கரை பசை மூலம்  வேலைக்கார தேனீக்களுக்கு அளிக்கப்படுகின்றன. அவை தங்களது ராயல் ஜெல்லி மூலம் ராணித் தேனீக்கு அதை ஊட்டுகின்றன. ராணித் தேனீயின் வயிற்றிலிருந்து பேக்டீரியா எதிர்ப்பு மருந்து கருமுட்டைக்குள் செல்லுகின்றன. அதிலிருந்து வெளிவரும் லார்வா புழுக்கள் நோயி லிருந்து பாதுகாக்கப்படுகின்றன. ‘தேனீக்களை பாதிக்கும் பிரச்சனை களில் பூச்சிக்கொல்லிகள், ஒட்டுண்ணிகள், காலநிலை மாற்றங்கள், உணவு  பற்றாக்குறை போன்றவையும் உள்ளன. இந்த நோய் அவற்றில் ஒன்று தான்’ என்கிறார் இதன் ஆய்வாளரான நைகேல் சுவிஃப்ட். ராணித் தேனீ  அடுத்த பருவத்திற்கும் இந்த எதிர்ப்பை கடத்த முடியுமா, அதிலிருந்து பிறக்கும் அடுத்த தலைமுறை ராணி தேனீயும் இந்த எதிர்ப்பை பெற்றி ருக்குமா போன்றவை ஆராயப்பட வேண்டும் என்கிறார் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆண்டிரியா கியன்.

பழங்களின் அரசன்

உலகளவில் மாம்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது. 54.2% மாம்பழங்கள் இந்தியாவில் உற்பத்தியாகுகின்றன. 28000 மெட்ரிக் டன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு 48 மில்லியன் டாலர்கள் ஈட்டப்பட்டுள்ளது. இந்தியாவின் பலபகுதிகளில் விளையும் மாம்பழங்கள் அளவு, நிறம் மற்றும் ருசி ஆகியவற்றில் வேறுபடுகின்றன. இது குறித்து டெல்லியிலுள்ள தேசிய தாவர உயிர் தொழிலியல் ஆய்வு மையம் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. ஆர்.சி.ஜெனா மற்றும் பி.கே.சந்த் ஆகியோர் செய்த ஆய்வில் மரபணுக்களில் காணப்படும் சில மாறுபாடுகளே அளவு, நிறம் மற்றும் ருசி ஆகியவற்றிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மாம்பழம் ஏன் பழங்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது? ருசியில் மட்டுமல்ல சத்துக்களிலும் அது சிறந்து விளங்குவதே அதற்குக் காரணம். மாம்பழத்தைப் போலவே பருவ கால பழங்களான திராட்சை, கொய்யா, பலா, பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றிலும் சத்துகள் உள்ளன. ஆனால் அவற்றைவிட விட்டமின் A,B,C, E &K, மக்னீசியம், தாமிரம், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் ஆகியவை அதிக அளவில் மாம்பழத்தில் உள்ளன. இது குறித்து அமெரிக்க கிளீவ்லேண்ட் மருந்தக இணய தளத்தில் ‘மாம்பழ ருசி; ஆறு முக்கிய உடல்நல சத்துகள்’ என்கிற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. குடலுக்கு நல்லது. அதிலுள்ள நார்சத்து மலச்சிக்கலையும் வாயு தொந்தரவையும் கட்டுப்படுத்துகிறது.  பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நாம் நமது ஆரோக்கியமான உணவு இலக்கை தொடர முடிகிறது.  மாம்பழத்திலுள்ள வைட்டமின்களும் ஆன்டி ஆக்சிடென்ட்சும் ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது.  அதிலுள்ள கரையும் நார்சத்து கொலஸ்டிராலை குறைக்க உதவுகிறது.  இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.  மாம்பழத்திலுள்ள மேங்கிஃபெரின் எனும் ஆன்டி ஆக்சிடென்ட் சில வகை புற்று நோய்களை தடுப்பதில் உதவுகிறது. ஹைதராபாத் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவும் மேங்கிஃபெரின் குடல் புண்களை குறைக்கிறது என்று காட்டியுள்ளது.

தலைமை எது? மூளையா? இதயமா?

நமது மனதில் உருவாகும் கொந்த ளிப்பான எண்ணங்கள் இதய துடிப்பை அதிகப்படுத்தும் என்  பது அனைவரும் அறிந்ததே. நமக்கு  நெருக்கமானவரின் இறப்பு, நமக்கே புற்று நோய் கண்டறியப்படுவது, தீவிர மான ஒரு வாக்குவாதம் ஆகியவை மாரடைப்பை ஒத்த அறிகுறிகளை உண்டாக்கலாம். ஆனால் இதற்கு தலைகீழாக இதயத்தின் குரலை நமது  மூளை கேட்கிறது என்பது பலரும் அறி யாதது. இதயத்திலிருந்து ஆற்றல் மிக்க சமிக்கைகள் மூளைக்கு செல்  கின்றன. இதயம் மட்டுமல்ல, உட லின் மற்ற பாகங்களும் மூளைக்கு  சமிக்கைகளை அனுப்புகின்றனவாம். இது குறித்த துறை இன்ட்ரோ ஸெப்ஷன் (interoception) எனப்படு கிறது. ‘உள்பாகங்களுக்கிடையில் நடைபெறும் இடையீடுகள் வெளி உல கத்துடன் நாம் கொள்ளும் தொடர்பு களுக்கு இணையான முக்கியம் என்பதை மறந்துவிட்டோம்.’ என்கிறார்  நரம்பியல் விஞ்ஞானி கேத்ரைன் டாலன்- பவ்ட்ரி. இதயத் துடிப்புக்கேற்ப மூளை வினையாற்றுவதை HER (heartbeat-evoked response) என்றழைக்கிறார்கள். இது பலமாக இருக்கும்போது கண்பார்வை கூர்மை யாகுவது ஓர் ஆய்வில் தெரியவந்துள் ளது. நமது நினைவாற்றலிலும் இதயத்  துடிப்பிற்கு பங்கு உள்ளதாம். உள்ளு ணர்வு, முடிவெடுத்தல், உணர்ச்சிகள் ஆகியவற்றிலும் இதயம் தாக்கம் செலுத்துவது குறித்த அறிகுறிகள் உள்ளன.  இதயத் துடிப்பினால் மூளை செயல்பாடுகள் மாறுகிறதா அல்லது அது ஒரு தற்செயல் இணைவா என் பதை அறிவதற்காக நடத்தப்பட்ட சோதனையில் செயற்கையாக தூண்டப்பட்ட இதயத் துடிப்பு மூளை யின் செயல்பாட்டை மாற்றவில்லை; மாறாக அதன் சூழலில் ஆபத்தை எதிர்  கொள்ளும்போது இயல்பாக இதயத் துடிப்பு அதிகமாகி செயல்பாடுகள் மாறுகின்றன என்பது தெரியவந்தது. அதாவது இதயத் துடிப்பு அத்துடன் சூழலிலிருந்து கிடைக்கும் சமிக்கை கள் இரண்டையும் இணைத்தே மூளை முடிவுகளை எடுக்கிறது. எது  எதை இயக்குகிறது என்பதில் நாம் மிக வும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்கிறார் ஸ்ட்ரிக்.  இதற்கு முன் அவர் வெறிநாய்  வைரசான ரேபிஸில் செய்த சோதனை  இதில் சற்று பயனுள்ளதாக இருக்கி றது. இந்த வைரஸானது நரம்பு இழை களில் முன்பின்னாக செல்லக்கூடியது. இதனுடன் ஒளிரக்கூடிய பொருளை இணைத்து செலுத்தும்போது நரம்பு  சுற்றுகளை அறியலாம். நாம் ஒரு அவ சர சூழலில் எதிர்த்து நிற்கப்போகி றோமா அல்லது பின்வாங்கப்போகி றோமா என்பதை அட்ரீனல் சுரப்பிகள் முடிவு செய்கின்றன. இந்த சோதனை மூலம் அவற்றிற்கிடையேயான இணைப்புகள் கண்டறியப்பட்டுள் ளன. இதையே இதயத்திற்கும் செய் யப்போவதாக ஸ்ட்ரிக் கூறுகிறார்.

;