tamilnadu

img

பெல் நிறுவனத்திற்கு ஒன்றிய-மாநில அரசுகள் நேரடியாக ஆர்டர் வழங்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, செப்.19- பெல் சிஐடியு தொழிற்சங்க ஆண்டு பொது மகாசபை ஞாயி றன்று பெல் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது. ஆண்டு பொது மகா சபைக்கு முன்னாள் எம்.பி டி.கே.ரங்கராஜன் தலைமை வகித்தார்.  சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் சிவராஜன், சங்க துணைத் தலைவர்கள் அருணன், திவ்யாஸ்ரீ ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பரமசிவம்  வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை  துணைத் தலைவர் ராஜேஷ் கண்ணா வாசித்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் துவக்க  உரையாற்றினார். வேலை அறிக் கையை சங்க பொதுச் செயலாளர் பிரபு வாசித்தார். வரவு-செலவு  அறிக்கையை பொருளாளர் இசக்கி முத்து சமர்ப்பித்தார். சங்க விதிகள் திருத்தம் குறித்து துணைத்தலை வர் பெரியசாமி பேசினார். பெல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது. ஒன்றிய, மாநில  அரசுகள் நேரிடையாக பெல் நிறு வனத்திற்கு ஆர்டர் வழங்க வேண்  டும். புதிய பணி நியமனங்களை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மதிப்புறு தலை வராக டி.கே.ரங்கராஜன், தலைவ ராக எஸ்.ஸ்ரீதர், பொதுச் செயலா ளராக ஆர்.பரமசிவம், செயலாள ராக பி.காளிராஜ், பொருளாளராக கே.இசக்கிமுத்து, அமைப்பு செய லாளராக வி.பெரியசாமி மற்றும் 10 துணை தலைவர்கள், 14 துணை செயலாளர்கள், 200 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்ட னர். அமைப்பு செயலாளர் சந்திர சேகரன் நன்றி கூறினார்.

;