புதுதில்லி,டிச.11- அரசின் கட்டமைப்பு சரியில்லாததால் திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். கட்டுமான சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சியில் ஒன்றிய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி காணொலிக்காட்சி மூலம் பங்கேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், ‘நான் யார் மீதும் எந்த விதமான குற்றச்சாட்டுகளையும் முன்வைக்க விரும்ப வில்லை. ஆனால் கட்டமைப்பு சரியில்லாத காரணங்க ளால் அதிகமான திட்டங்கள் தாமதமாகுகின்றன. முடி வெடுக்காததும், முடிவெடுக்க காலதாமதமாக்குவதும் அரசின் கட்டமைப்பில் மிகப்பெரிய பிரச்சனைகளாக உள்ளன’ என்று தெரிவித்தார். மோடி அரசில் அங்கம் வகிக்கும் முக்கியமான அமைச்சரே இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மோடி அரசு என்ன பதில் சொல்லப்போகிறது என்று அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.