புதுச்சேரி,டிச.7- புதுச்சேரி காவலர்களுக்கு சீருடைப் படியாக இனி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படா மல் சீருடைப் படி பாக்கி புதுச்சேரி உள்ள சூழலில், ஏழாவது ஊதியக்குழு பரிந்து ரைப்படி சீருடைப் படி ரூ.10 ஆயிர மாக மத்திய அரசு நிர்ணயித்துள்ள தைத் தர புதுச்சேரி நிதித்துறை ஒப்புதல் தந்துள்ளது. சீருடைப் படி இம்மாதத் துக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், பாக்கியுள்ள நான்கு ஆண்டு களுக்கான தொகையைத் திருப்பித் தருவது பற்றி நிதித்துறை எவ்விதத் தகவ லும் தெரிவிக்கவில்லை. புதுச்சேரி காவல்துறையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிபுரிந்து வரு கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சீருடை வழங்கப்படும். கடந்த 2017-இல் இருந்து சீருடைக்கு பதில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் தர முடிவு எடுக்கப் பட்டது. ஆனால் சீருடைக்கான தொகை ஐந்து ஆண்டுகளாகத் தரப்படவில்லை. இதனால் சொந்த செலவில் வாங்கத் தொடங்கினர்.