சென்னை,டிச.23- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) மதுக்கூர் இராம லிங்கம், பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஆகியோர் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி யிருப்பதாவது: தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவ ராகிய ‘வாத்தியார்’ ஜேக்கப் நெல்லையில் டிசம்பர் 21 அன்று இரவு உடல்நலக்குறைவால் கால மானார். 1949–50 ஆம் ஆண்டுகளில் கம்யூ னிஸ்ட்டுகள் மீது நெல்லை சதிவழக்கு புனையப் பட்டது. அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் தோழர் ஆர்.நல்லகண்ணுவும் ஜேக்கப் பும் மட்டுமே உயிரோடு எஞ்சியிருந்த நிலையில், ஜேக்கப் காலமாகியுள்ளார். அவருக்கு வயது 96. விசாரணைக்கைதியாக அழைத்துச் செல்லப்பட்டு போலீஸ் காவலில் கடும் சித்ரவதை செய்யப்பட்ட ஜேக்கப், சுமார் மூன்றரை வருட காலத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவர் எழுதிய டைரிக் குறிப்புகளே அவரைக் காட்டிக்கொடுத்தன. பின்னர், அதுவே அவர் விடுதலை செய்யப்படுவதற்கும் காரணமாய் அமைந்தன.
இதை மையமாக வைத்து “வாத்தி யார்” என்ற நாவலை எழுதினார். அது பல பதிப்பு கள் கண்டது. தொடர்ந்து, “மரண வாயிலிலே” என்றொரு நூலை எழுதினார். பனையண்ணன் என்பது இன்னொரு நாவல். இவர் எழுதிய நூல்களின் பட்டியல் 130- க்கும் மேல். தனது பத்தொன்பதாவது வயதில், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அரு கில் உள்ள நைனார்புரம் என்ற கிராமத்தின் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். நான்கு, ஐந்து மாணவர்களே அப்போது பயின்றனர். அவர்களும் அந்த ஊரின் பண்ணையாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் களே. அந்த ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளின் குழந்தைகள், பண்ணையார் வீட்டு மாடுகளை குளிப்பாட்டு வதிலும், தொழுவங்களை பெருக்கி சுத்தம் செய்வதிலும் ஈடுபட்டிருந்ததைக் கண்டு கொதித்துப்போய், அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் கற்பித்தார். பள்ளியில் 65 மாணவ, மாணவியரை சேர்த்து பண்ணையா ரின் கோபத்திற்கு ஆளானார்.
பண்ணையாரின் அடியாட்களின் தாக்குதலுக்குள்ளானார். அந்த நேரம் இடதுசாரி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்ட போது, தலைமறைவாகி இருந்த தோழர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட தோழர்களுக்கு தேவாலயத்தில் அடைக்கலம் கொடுத்தார். அவர்களுக்கு உணவு வழங்கியும், இரவு தங்கிச் செல்லவும் இடம் கொடுத்ததுதான் இவர் மீதான குற்றச்சாட்டு. விடுதலைக்குப்பின் மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். பாளையங்கோட்டையில் இருந்து வெளி வரும் “நற்போதகம்” என்ற மாதாந்திர இதழில் 12 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் தொடர்ந்து 165 ஆண்டுகளாக இன்றும் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் பணியாற்றிய கிறிஸ்தவ மிஷனரிகள் கால்டுவெல், ரேனியஸ் அடி களார், சாப்டர், ஜான் டக்கர் போன்றவர்களின் கல்விப்பணிகள் குறித்தும், பெண்களுக் கென்று தனியாக கல்வி நிறுவனத்தை உரு வாக்கிய சாராள் டக்கர் பற்றியும் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் வாத்தியார் ஜேக்கப். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கிராமங் களுக்கு சென்று, ஊர் வரலாற்றைச் சேகரித்து, “ஊரும் பேரும்” என்று மூன்று தொகுதிகளாக வெளியிட்டார் இவர். வாழ்நாளின் கடைசி வரை, டைரி எழுதும் பழக்கத்தை மேற்கொண்டி ருந்த எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப் அவர் களின் மறைவிற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.