tamilnadu

img

கெடிலம் ஆற்றில் எரிக்கப்படும் குப்பை: புகை மூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு

கடலூர்,டிச.23- கெடிலம் ஆற்றில் கொட்டப்பட்ட குப்பைகளை எரிப்பதை கண்டித்து வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.  கடலூர் கம்மியம் பேட்டை அருகே கெடிலம் ஆற்றில் மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும், இது தொடர்ந்து கொண்டு வரு கிறது. இந்த நிலையில், குப்பையில் தீ வைத்ததால் சாலை முழுவதும் ஒரே புகை மூட்டமானது. இத னால், அந்த வழியாக போக்குவரத்து செல்ல முடியவில்லை. பலருக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. பின்னர், தகவறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நகராட்சி மற்றும் தீய ணைப்பு துறையினர் குடிநீர் வாகனத்தை கொண்டு வந்து தீயை அணைக்க முற்பட்டனர். அப்போதும் தீ கட்டுக்குள் வரவில்லை. இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் 2மணி நேரத்திற்கு மேலாக கம்மியம்பேட்டை சாலையில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாலிபர் சங்கம் இந்த சம்பவத்தின்போது உடனடியாக களத்தில் இறங்கிய வாலிபர் சங்கத்தினர் கம்மியம்  பேட்டை சாலையில் போக்கு வரத்தை சரி செய்ததுடன் மாநகராட்சி, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தீயை அணைக்க உதவினர். மேலும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை கண்டித்து அதே இடத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்ட னர். போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தில் நகரச் செயலாளர் டி.எஸ். தமிழ்மணி தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் குழு உறுப்பினர் எம்.பழனி, வாலிபர் சங்கம் நகர தலைவர்  எஸ்.செந்தமிழ் செல்வன், மற்றும் கே. விஜயரங்கன்,எம்.ராஜா, டி.சிவா,வி.ராஜா, அய்யா சாமி, ஹரி, சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி நிர்வாகம் இனிவரும் காலங்களில் கெடிலம் ஆற்றில் குப்பை களை  கொட்டக் கூடாது என்றும், குப்பைகள் ஆற்றில் கொட்டப்படுவது தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதே நடவடிக்கையை மாநக ராட்சி நிர்வாகம் ஈடுபட்டால் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்ட த்துக்கு செல்வோம் என்றும் தெரிவித்தனர்.

;