tamilnadu

img

தொழில்நுட்பம்

இன்று மெட்டாவின் “த்ரெட்ஸ்” அறிமுகம்

டுவிட்டருக்குப் போட்டியாக “த்ரெட்ஸ்” என்ற பெயரில் புதிய சமூகவலைதள ஆப் ஒன்றை முகநூல் நிறுவ னத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் வியாழ னன்று தொடங்குகிறது. மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டாகிராமின் பயனர் ஐடி மற்றும் பெயரை த்ரெட்ஸுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என மெட்டா அறிவித்துள்ளது. 

உலகின் முதல்  அம்மோனியா கார் எஞ்சின்

உலகின் முதல் ‘அம்மோனியாவில் இயங்கும் கார் எஞ்சி னை’ உருவாக்கியுள்ள தாக சீனா அரசுக்கு சொந்தமான ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனம் ஜிஏசி (GAC - Guangzhou Automobile Group) தெரிவித்துள்ளது. அமோனியாவை விரை வாக எரிப்பது கடினம் என்பது அறிவியல் உலகம் அறிந்தது என்றாலும், பயணிகள் கார் துறையில் எரி பொருளாக அமோனியாவை பயன்படுத்தும் சீனாவின் வெளியீடு அறிவிப்பு  பலத்த பாராட்டுகளை பெற்றுள்ளது. 

வணிகம் வாடகை முறையில் ஆடைகளை வழங்கும் ஜப்பான் ஏர்லைன்ஸ் 

ஜப்பான் செல்லும் பயணிகளுக்கு “ஜப்பான் ஏர்லைன்ஸ்” விமான நிறுவனம் வாடகை ஆடைகளை வழங்கும் புதிய திட்டத்தை  அறிவித்துள்ளது. லக்கேஜ் குறைக்கவும், சுற்றுலாவை மேம்படுத்துவதையும் நோக்க மாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த புதிய திட்டத்தில் பயணத்திற்கு முன் வலைத்தளம் வழியாக ஆடைகளைத் தேர்ந்தெடுத்து 28 அமெரிக்க டாலர் செலுத்தி ஆடைகளை வாடகைக்கு பெற்றுக்கொள்ளலாம். இந்த வாடகை ஆடைகள் பயணிகள் தங்குமிடத்திற்கே டெலிவரி செய்யப்படும் என  ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறி வித்துள்ளது.

நார்வேயில் பாஸ்பேட் பாறை படிவம்:  100 ஆண்டுகளின் தேவையை பூர்த்தி செய்யும்

நார்வே நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய பாஸ்பேட் பாறை படிவம் அடுத்த 100 ஆண்டுகளில் சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகளுக்கான உலகளாவிய தேவை யை பூர்த்தி செய்யும் என்று அந்த தளத்தை கட்டுப்படுத்தும் நார்ஜ் மைனிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போதைய தோராய மதிப்பின்படி குறைந்தது 70 பில்லியன் டன்கள் பாஸ்பேட் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமுல் பாலில் யூரியா?

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பால் நிறுவன மான அமுல் பாலில் யூரியா இருப்பதாக பேஸ்புக் வீடியோ வில் வெளியான தகவல் தொடர்பாக குஜராத்தின் காந்திநகரில் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. வீடியோ வெளியிட்ட நபர் அமுல் பாலில் யூரியா கலந்து இருப்பதாக அரசு ஆய்வகம் உறுதிப் படுத்தியதாகவும் கூறியுள்ளார். நாட்டின் முக்கிய பால் நிறுவனங்களில் ஒன்றான அமுலில் யூரியா இருப்பதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தக்காளி ரூ.160-ஐ தாண்டியது

விளைச்சல் குறைவு காரண மாக தக்காளி விலை ஜெட் வேகத்தில் எகிறி வரும் நிலை யில், புதனன்று நாட்டின் சில இடங்களில் தக்காளி கிலோ வுக்கு ரூ.160யை தாண்டியுள்ளது. கடந்த வாரம் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.84க்கு விற்கப்பட்ட நிலையில், நடப்பு வாரத்தில் தக்காளி விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாமத மாக பெய்த மழை மற்றும்தனியார் விலை நிர்ணயம் காரணமா கவே தக்காளி விலை உயர்ந்ததற்கான முக்கிய காரணமாக உள்ளது என கோடக்இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டிஸின் மூத்த பொருளாதார நிபுணர் சுவோதீப் ரக்சித் கூறினார்.

அரசியல் ‘பாஜகவின் கேவலமான முகம்’

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினரின் முகத்தில் பாஜக தலைவர் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்து காங்கிரஸ்  மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு பாஜக தலைவரின் மனிதாபிமானமற்ற குற்றத்தால் மனிதநேயம் வெட்கக்கேடானது.  இந்த சம்பவம் மூலம் பழங்குடியினர் மற்றும் தலித்துகள் மீதான பாஜக வெறுப்பின் கேவலமான முகம்  மீண்டும் வெளிப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

‘ம.பி.யிலும் அடி விழும்’

“கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வியடைந்ததால் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. ஆனால் மத்தியப் பிரதேசம், ஹரியானா மற்றும் பிற மாநிலங்களிலும் கர்நாடகாவின் நிலைமை போன்று பாஜகவிற்கு ஏற்படலாம்” என தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவும், சரத் பவாரின் பேரனுமான ரோஹித் பவார் பேசியுள்ளார்.

பாஜக துணைத் தலைவர் தற்கொலை முயற்சி

தெலுங்கானா பாஜக தலைவர் பதவியில் இருந்து பாண்டி சஞ்சய் குமாரை நீக்கி புதிய தலைவராக ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாண்டி சஞ்சய் குமாரை மாற்றியதால் ‘வேதனை’ அடைந்த பாஜக கம்மம் நகர துணைத் தலைவர் கஜ்ஜாலா ஸ்ரீனிவாஸ், தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

 

;