tamilnadu

நாகலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு

நாகலாந்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட 13 பேர் பலி மோன் (நாகாலாந்து), டிச.5- நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில் உள்ள திரு கிராமப் பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு ராணுவ வீரர் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். 13 பேர் உயிரி ழந்ததை மோன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இம்னா லென்சா உறுதிப்படுத்தியுள்ளார். கொல்லப்பட்டவர்களில் பலர் நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் ஆவர். ஓடிங் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மினி வாகனம் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பாதுகாப்புப் படை யினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஒடிங் கிராமத்திலிருந்து சென்றவர்கள் கிராமத்திற்கு குறித்த நேரத்திற்கு வராததால் தன்னார்வலர்கள் சிலர் அவர்க ளைத் தேடிச் சென்றதாகவும், லாரியில் அவர்களின் உடல்கள் கிடந்ததாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். உளவுத்துறை அளித்த தகவல்கள் அடிப்படையில் அசாம் ரைபிள்ஸ் காவல்துறையினர் போராட்டக்காரர்கள் நட மாட்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருந்த தாகவும் அப்போது தவறுதலாக நடைபெற்ற துப்பாக்கிச் சூட் டில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ கூறுகை யில், ஓடிங்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டது துரதிர்ஷ்ட வசமானது மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் ஆகும். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய சிசிச்சையளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் நலம்பெற விரும்புகிறேன் எனத் தெரிவித் துள்ளார்.

;