அதிகாரிகள் கண்காணிப்பில் வாழைக்குளம் கண்மாய்
திருவில்லிபுத்தூர்:
நிவர் புயல், மற்றும் புரெவி புயல் வடகிழக்குப் பருவமழை ஆகியவற்றின் காரணமாக திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய் தது. இதனால் மேற்குத் தொடர்ச்சி மலைஅடிவாரங்களில் உள்ள கண்மாய்கள், குளங்கள் நிரம்பபத் தொடங்கின. திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம்வாழைக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது. அந்தத் தண்ணீர் திருவில்லிபுத்தூரில் உள்ள பெரியகுளம் கண்மாய்க்கு வந்து சேர்ந்ததுஇதனால் பெரியகுளம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது இதுகுறித்துபொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “சுமார் 70 சதவீதம் பெரியகுளம் கண்மாயில் தண்ணீர் உள்ளது இன்னும் 30 சதவீதம்தண்ணீர் வந்தால் கண்மாய் நிரம்பி விடும்.தற்போதுள்ள 70 சதவீதம் தண்ணீர்சுமார் நான்கு மாதங்களுக்கு கண்மாயில்தேங்கி நிற்கும் என்றார்.
**********************
தொழில் முனைவோர் மேம்பாட்டு முயற்சி
விருதுநகர்:
படித்த இளைஞர்களில் முதல் தலைமுறை தொழில் முனைவோர்களைக் கண்டறிந்து அவர்களை ஆற்றல்மிக்க முனைவோர்களாக உருவாக்கும் நோக் கில் மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி அளித்து புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்க தமிழ்நாடு அரசு தொழில்வணிகத்துறை, விருதுநகர் மாவட்ட தொழில் மையம், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இணைந்து இளைஞர்களுக்கு பயிற்சியளித்தனர். திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மல்லி ஆறுமுகம் தலைமைவகித்தார். திருவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் முன் னிலை வகித்தார். விருதுநகர் மாவட்ட தொழில் மைய புலனாய்வாளர் சுரேஷ் இளைஞர்களுக்கு பயிற்சியளித்தார். சுமார் 70-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
**********************
சிவகாசியில் கொத்தடிமைகள் மீட்பு
சிவகாசி:
சிவகாசி அருகே தனியார் அட்டை மில்களில் சட்ட விரோதமாக கொத்தடிமைகளாக வேலை வாங்கப்பட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த 32 பேர் மீட்கப்பட்டனர்.சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டி பகுதிகளில் தனியார் அட்டை மில்கள் உள்ளன. இங்கு சட்டீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரைச் சேர்ந்த பலர் கொத்தடிமைகளாக பணியில் அமர்த்தப்பட் டுள்ளதாகவும், அவர்களுக்கு அடிப்படைவசதிகள் செய்து தராமல் வேலை வாங்கிவருவதாகவும் அட்டை மில்களில் பணியாற்றிய தொழிலாளர்களில் ஒருவர் படம் பிடித்து தங்களது உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இதுகுறித்து சட்டப் பணிகள் ஆணையத்திற்கு புகார் வந்தது.இதையடுத்து, சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளர் நீதிபதி மாரியப்பன், சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் அட்டை மில்களில் சோதனை நடத்தினர். அப்போது, ஒருமில்லில் 23 பேரும், அதன் அருகே இருந்தமற்றொரு ஆலையில் ஒன்பது பேர் என மொத்தம் 32 பேர் கொத்தடிமைகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் களில் பத்து பேர் பெண்கள், நான்கு பேர்குழந்தைகள். அவர்கன் அனைவரையும் மீட்டு, சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.