யுகேயில் ஒருகாலத்தில் அழியும் நிலையில் இருந்த மனிதக் கையின் அளவு வளரும் பெரிய ராஃப்ட் சிலந்திகளை (Fen raft spiders) பறவைகள் பாதுகாப்புக்கான ராயல் சங்கத்தினரின் (RSPB) ஒத்துழைப்புடன் செஸ்ட்டர் (Chester) விலங்கு காட்சி சாலை விஞ்ஞானிகள் மீட்டுள்ளனர். மிகச்சிறந்த இனப்பெருக்க வசதிகளை நீரில் பகுதியளவு வாழும் இந்த சிலந்திகளுக்கு ஏற்படுத்தி இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் வாழ் சூழல் மண்டலத்தின் பாதுகாப்பில் தீங்கு செய்யாத இந்த சிலந்திகள் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன.
உணவூட்டி வளர்க்கப்பட்ட சிலந்திகள்
ஆனால் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழிட இழப்பால் இவை அழியும் நிலைக்கு தள்ளப்பட்டன. செஸ்ட்டர் விலங்குக் காட்சிச் சாலை ராயல் சங்கத்தி னரின் ஒத்துழைப்புடன் நூற்றுக்கணக்கான இளம் சிலந்திகளை வளர்த்தனர். ஒன்றை யொன்று பிடித்து உண்பதைத் தடுக்க இவை தனித்தனி சோதனைக் குழாய்களில் வைத்து பராமரிக்கப்பட்டன. காட்சி சாலையின் உயிரி பாதுகாப்பு உண வூட்டும் வசதியில் இவை வனப்பகுதியில் விடுவதற்கேற்ற அளவு பெரிதாக வளரும் வரை பராமரிப்பாளர்களால் சிறிய இடுக்கி களின் உதவியுடன் கைகளால் உணவூட்டி வளர்க்கப்பட்டன. இந்த உயிரினங்களுக்கு 2024 சிறந்த இணைசேரும் ஆண்டாக அமைந்ததால் வரும் நாட்களில் இனப் பெருக்கத்திற்கு தகுதியான 10,000 புதிய பெண் சிலந்திகள் வளர்ந்து உருவாகும் என்று நம்பப்படுகிறது. இவற்றின் கால்கள் 65 முதல் 70 மில்லி மீட்டர் வரை நீளம் உடை யது என்று லண்டன் காட்சிச் சாலை கூறுகிறது. இது மனித உள்ளங்கையின் அகலம் அல்லது பிறந்த எலியின் நீளத்திற்கு சமமா னது. சிலந்தி மீட்பில் இந்த காட்சிச் சாலை பிரிட்டிஷ் மற்றும் ஐரிஷ் காட்சிச் சாலைகள், நீர் வாழ் உயிரினங்களுக்கான சங்கத்தின் (BIAZA, the British and Irish Association of Zoos and Aquariums) மற்ற உறுப்பினர் களுடன் இணைந்து பணியாற்றி வரு கின்றது. காட்சிச் சாலையில் இந்த சிலந்தி கள் 2011 முதல் 2013 வரை வளர்க்கப் பட்டன. பிறகு வனப்பகுதியில் திறந்துவிடப் பட்டன. ஆயிரக்கணக்கான சிலந்திகள் 2014 இல் வனப்பகுதியில் திறந்துவிடப்பட்டன. இவற்றை அழியாமல் பாதுகாக்கும் முயற்சியில் ராயல் சங்கத்துடன் இணைந்து பஞ்கேற்றது பெருமைக்குரியது என்று செஸ்ட்டர் காட்சிச் சாலை கூறுகிறது. கிரேட் ராஃப்ட் சிலந்தி என்றும் அழைக்கப்படும் இவை சாக்லேட் பழுப்பு நிறமுடையது. உடலின் பக்கவாட்டில் கிரீம் நிறத்தில் கோடு கள் காணப்படுகின்றன. இவை நீரில் நடக்கக்கூடியவை. மாசுபடாத நீர் மற்றும் புதர்களில் வாழும் இயல்புடையவை. யுகேயில் 1956 இல் சிலந்தியியலாளர் (Arachnologist)டாக்டர் எரிக் டஃப்ஃபியால் (Dr Eric Duffey) கிழக்கு ஆங்லியாவில் (East Anglia) உள்ள வேவ்னி (Waveney) நதியின் தோற்றுவாயில் இவை முதல் முதலாக கண்டுபிடிக்கப்பட்டன. “இவற் றின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கவ லைப்பட வேண்டியதில்லை” என்று லண்டன் காட்சிச் சாலை சிலந்தி நண்பர்கள் அமைப்பின் (Friendly Spider Programme) திட்டத்தின் தலைவர் டேவ் கிளார்க் (Dave Clarke) கூறுகிறார். இது மிகப்பெரிய சிலந்தி மற்றும் வாழிட மீட்பு முயற்சி. இதன் வெற்றி உயிர்ப் பன்முகத் தன்மையை பாதுகாக்கும் புதிய திட்டங்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒன்று என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.