சென்னை, செப். 11- திமுகவின் வெற்றி அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களால் கிடைத்த வெற்றி என்றும் இவர்களின் கோரிக்கை களை தமிழக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஜாக்டோ – ஜியோவின் ஆசிரியர், அரசு ஊழியர், அரசுப் பணியாளர் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத்திடலில் சனிக்கிழமை (செப். 10) மாலை நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் மு. அன்பரசு நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான கு.தியாக ராஜன் வரவேற்றார்.
இதில் கலந்துகொண்டு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய தாவது: நீங்கள் தீவுத்திடலில் கூடி யிருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் தனித்தீவுகள் அல்ல. கோட்டைக்குப் பக்கத்திலேதான் உங்கள் தீவு இருக்கிறது. கோட்டையையும் உள்ளடக்கியதுதான் உங்கள் தீவு. நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். அரசும், அரசியலும் இரண்டறக் கலந்தது. இதனை யாரா லும் பிரிக்க முடியாது. அந்த உணர் வோடுதான் நான் இந்த மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன். அரசு ஊழியர்கள் மாநாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று நினைத் தாலும், அரசு ஊழியர் மாநாட்டில் அர சியல் பேசாமல் வேறு எங்கே பேசு வது? நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக மகத்தான வெற்றி யைப் பெற்று 6ஆவது முறையாக ஆட்சி யைப் பிடிப்பதற்கு அரசு ஊழியர் களும், ஆசிரியர்களும்தான் காரணம். திமுக ஆட்சிக்கு வந்ததும், உங் களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவோம் என்று தேர்தல் நேரத்தில் நான் வாக்குறுதி அளித்தது உண்மைதான். நான் அதை மறுக்கவில்லை, மறைக்கவில்லை, மறக்கவும் இல்லை. உங்களது நியாயமான கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றித் தருவோம் என உறுதி அளிக்கிறேன்.
பணியிட மாறுதல் கலந்தாய்வு
இந்த மாநாட்டிற்கு வரும்போதே, உங்களது கோரிக்கைகள் சிலவற்றை நிறைவேற்றும் கோப்புக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். முதலாவதாக, அனைத்து வகையான தற்காலிக பகுதிநேர பணியில் இருக்கும் சுமார் 16 ஆயிரம் ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் 60 வயது வரை தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப் படுகிறது. பல்லாண்டுகளாக பணி மாறு தல் இன்றி இருக்கக்கூடிய பணியாளர் களுக்கு அவர்தம் விருப்பத்திற்கேற்ப, இணைய வழியில் ஒளிவுமறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு அக்டோபர் 15 முதல் நடத்தப்படும்.
புதிய பணியிடங்கள்
தமிழகத்தில் பல்லாண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வந்த பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகக் கட்ட மைப்பு, மறுசீரமைப்பு என்ற பெய ரில் அரசாணை எண். 101 வாயி லாக 18.5.2018 அன்று மாற்றியமைக்கப் பட்டது. ஆசிரியர்கள், சங்கங்கள் என அனைத்து தரப்பினருக்கும் இந்த நிர்வாக முறை அதிருப்தியை ஏற்படுத்தி யது. இந்த மறு சீரமைப்பில் உள்ள பிரச்சனைகளை சுட்டிக்காட்டி, அதை களைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அரசாணை எண்.151 வாயிலாக உரிய உத்தரவுகள், 9.9.2022 அன்று பிறப்பித்திருக்கிறேன் என்றும், இதன்மூலம் ஒவ்வொரு மாவட்டத் திற்கும், தொடக்கக் கல்விக்கு என மாவட்ட அளவிலான அலுவலர் பணி யிடம் புதிதாகக் கிடைக்கப் பெறுவது டன், தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடமும் புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளின் நீண்டநாள் கோரிக்கை யான, ஆங்கிலொ இந்தியன் பள்ளிகள் அனைத்தையும் ஒரே குடையின்கீழ் கொண்டு வருவதற் கான ஆணையும் பிறப்பிக் கப்பட்டுள்ளது.
பக்கபலமாக இருப்போம்
இத்தோடு முடிந்துவிடப் போவது இல்லை. அரசின் நிதிநிலை சீராகச் சீராக மக் கள் நலனுக்கான அறிவிப்பு கள் வந்து கொண்டே இருக் கும். உங்களது குறைகள் எதுவாக இருந்தாலும், உங்க ளது துறை அமைச்சரிடம் முறையிடலாம். அவர்கள் உங்களிடம் நட்போடு அணுகு முறையை கொண்டிருப் பார்கள். அவர்களிடம் உங் கள் கோரிக்கையை தெரி வித்தால், உறுதியாக அது என்னுடைய கவனத்திற்கு வரும். அவற்றைத் தீர்ப்ப தற்கான நடவடிக்கைகள் நிச் சயமாக எடுக்கப்படும். உங் கள் நம்பிக்கைக்கு என்றும் நான் பாத்திரமாக இருப்பேன். உங்களுடைய நம் பிக்கை வீண்போகாது. இந்த வெற்றி உங்களால் கிடைத்தி ருக்கக்கூடிய வெற்றி, இந்த ஆட்சி உங்களால் உருவாக் கப்பட்ட ஆட்சி. அப்படிப் பட்ட ஆட்சியை உருவாக்கி யிருக்கக்கூடிய உங்களுக்கு என்றைக்கும் நாங்கள் பக்க பலமாக இருப்போம். இவ் வாறு அவர் பேசினார்.