tamilnadu

img

மாணவர்கள் பங்கேற்புடன் திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள்

மாறிவரும் பொதுநிலைகளை யும், கேரளத்தின் தனித்துவ மான சமூக கட்டமைப்பையும் கருத்தில் கொண்டு திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் படி தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் வழங்கும் விழா புதனன்று மாநில அளவில் நடைபெற்றது. 2007 முதல் ஒரு விரிவான பாடத்திட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் பிரபல விவாதங்களை ஏற்பாடு செய்து ஜனநாயக நடவடிக்கைகள் மூலம் பாடத்திட்ட திருத்தம் செயல்படுத்தப்பட்டது. உல கிலேயே முதல் முறையாக வகுப்பறை களில் பாடத் திருத்த விவாதங்களில் மாண வர்களும் பங்கேற்றனர். கைத்தறி சீருடை விநியோகமும் தொடங்கி வைக்கப்பட்டது. கேரளாவில் 13,000 அரசு பள்ளிகளில் சுமார் 45 லட்சம் குழந்தைகள் உள்ளனர். புத்தகம் மற்றும் இதர வசதிகளை சரியான நேரத்தில் இலவசமாக வழங்க முடிவது கேரள கல்வித்துறையில் மிகப்பெரிய மாற்றம். 2016 க்கு முன்பு நிலைமை அப்படி இல்லை. அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் பாடப்புத்தகத்திற்காகவும் கற்றல் வசதிக்காகவும் தவித்த அந்த காலம் மாறி யுள்ளது. இன்று அரசுப் பள்ளிகளில் மக்க ளின் நம்பிக்கையை மீட்க முடிந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 45,000 வகுப்பறைகள் உயர் தொழில்நுட்பமாக மாற்றப்பட்டுள்ளன. கிஃபி மூலம் மட்டும் 973 பள்ளிக் கட்டடங்கள் புனரமைக்கப் பட்டன. பள்ளிகளில் சுமார் 1.5 லட்சம் மடிக்கணினிகள், சுமார் 70,000 ப்ரொஜெக் டர்கள் மற்றும் சுமார் 2000 ரோபோடிக் கிட்கள் கிடைக்கின்றன. அரசு பள்ளிகள் தவிர, உதவிபெறும் பள்ளிகளுக்கு சிறப்பு நிதி வழங்கப்பட்டது. இந்த வகையில் பொது கல்வித் துறையை மேலும் சக்தி வாய்ந்ததாக மாற்றும் நடவடிக்கைகளை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு செயல்படுத்தி வருகிறது.