மதுரை, டிச.11- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. செல்வம் சனிக்கிழமை மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் கூறியதாவது:- கடந்த அதிமுக ஆட்சியில் பறிக்கப்பட்ட பல உரிமைகள் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறு திகளாக அளித்தார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற பின் சட்ட மன்றத்தில் 110-விதிகளின் கீழ் சில சலுகைகளை அளித்துள்ளார். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். அதை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வரவேற்கிறது. சங்கத்தின் 14-ஆவது மாநில மாநாடு சென்னையில் 18, 19 தேதிகளில் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி நடைபெறும் மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார். குறிப்பாக தமிழகத்தில் காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் ஏற்கனவே முதல்வரின் கவனத்தில் உள்ளது. இது தொடர்பாக இரண்டு கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றுள்ளது. மாநாட்டில் கலந்துகொள் ளும் முதல்வர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கோரிக்கைகளை நிறை வேற்றார் என்ற முழு நம்பிக்கை அரசு ஊழியர் சங்கத்திற்கு உள்ளது. தமிழகத்தில் அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டுள்ளதே? என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த ஆ.செல்வம், “இது சமூக நீதிக்கு எதிரானது. காலிப் பணியிடங்களை நிரப்பி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும்” என்றார். தமிழகத்தில் சத்துணவு ஊழியர் பணி நியமனம் ரத்து செய்யப் பட்டுள்ளதே என்ற செய்தியாளர் கேள்விக்கு பதிலளித்த ஆ.செல்வம், காலதாமதமின்றி சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்றார்.