tamilnadu

img

தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவோம்!

திருநெல்வேலி, செப். 8- நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் வியாழக் கிழமை நடைபெற்ற அரசு விழா வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின்  கலந்து கொண்டார்.  அரசு விழாவில் ரூ.330 கோடி மதிப்பீட்டில் 30 ஆயிரத்து 658 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மேலும் பழமை மாறா மல் புதுப்பிக்கப்பட்ட பாளை. மேடை போலீஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட பாளை வ.உ.சி. மைதானம், மனக்காவலம் பிள்ளை சாலையில் உள்ள பல்நோக்கு அரங்கம் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார். தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்க ளில் முடிவுற்ற பணிகளை அவர் தொடங்கி வைத்தார். மேலும் ரெட்டி யார்பட்டி மலைப்பாதையில் அமைய உள்ள பொருநை அருங் காட்சியகம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் திருநங்கைக ளுக்கு சுயதொழில் தொடங்க கடன், இலவச வீட்டுமனை பட்டா, 78 பழங்குடி காணி இன மக்களுக்கு நில உரிமை பட்டா ஆகியவற்றை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பேசினார்.  

அப்போது அவர் பேசியதா வது:-  கடந்த ஒரு வருடத்தில் தி.மு.க. ஆட்சியின் கீழ் நெல்லை மாவட்டம் அடைந்த பலன்கள் ஏராளம். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 1,113 பேர் சிகிச்சை பெற்றுள்ள னர். கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப் பட்டுள்ளது. கூட்டுறவு துறை சார்பில் 9,319 விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர்.  28,183 பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் 58,913 மாணவ-மாணவிகள் பயன்பெற் றுள்ளனர். தமிழக அரசின் இலவச மகளிர் பயண திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடியே 92 லட்சம் பெண்கள் பயன் பெற்றுள்ள னர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப் பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 3,421 பேர் பயன் பெற்றுள்ளனர்.  கடந்த 2009-ஆம் ஆண்டு நான் துணை முதல்- அமைச்சராக இருந்த பொழுது, கலைஞர் முதல்- அமைச்சராக இருந்தபோது ரூ.369 கோடி மதிப்பீட்டில் சிறப்புமிக்க தாமிரபரணி-கரு மேனி ஆறு நதிநீர் இணைப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார். கடந்த 10 ஆண்டுகளாக அந்த திட்டத்தின் கீழ் எந்த பணியும் நடை பெறவில்லை. தற்போது அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி அடுத்த ஆண்டு 2023ஆம் ஆண்டு இந்த திட்டம் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும். இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வறட்சி பகுதிகளான 20 ஆயிரத்து 343 ஏக்கர் நிலங்கள் மற்றும் 50 கிராம  மக்கள் பயன்பெறுவார்கள்.  

தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக புத்தாக்க மை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட புத்தாக்க மையத்தின் கீழ் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், சிவ கங்கை மாவட்டங்களில் புதிய தொழில்முனைவோரை உரு வாக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அகத்தியர்மலை, யானைகள் காப்பகமாக அறி விக்கப்பட்டுள்ளது. கங்கைகொண் டான் சிப்காட்டில் சூரிய மின் உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு பகுதியில் ரூ.7 கோடியில் பல்லுயிர் சுற்றுச் சூழல் பூங்கா அமைக்கப்படும். களக்காடு பகுதியில் வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரூ.1 கோடியில் வாழை ஏல மையம் அமைக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் விளையாட்டு வீரர்களை தேசிய அளவிலான போட்டிகளுக்கு தயார்படுத்தும் வகையில் ராதாபுரத்தில் விளை யாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.   தமிழ்நாட்டில் பின்தங்கிய மாவட்டங்கள் என்பதே இருக்கக் கூடாது என்பதுதான் எனது எண்ணம். அதற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறோம். மேலும் 234 தொகுதிகளிலும் தீர்க் கப்படாத கோரிக்கைகளுக்கு தீர்வு காண ரூ.234 கோடி ஒதுக்கீடு செய் யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் இந்தியாவிற்கே முன்மாதிரியான திட்டங்களாக திகழ்கின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக ஆக்கு வோம். இவ்வாறு அவர் பேசினார்.

;