tamilnadu

img

போக்சோ வழக்கில் பிணை தரக்கூடாது

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்  அஜிதா பேட்டி

திண்டுக்கல்,டிச.5-  பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக  இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் மாநில சிறப்பு மாநாடு டிசம்பர்  5 அன்று திண்டுக்கல்லில் நடை பெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அஜிதா செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெண் குழந்தைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை கள், வன்கொடுமைகள், வல்லுறவு கள் அதிகரித்துக்கொண்டே வரு கின்றன. இது மிகவும் கவலை யளிக்கக்கூடியதாக உள்ளது. இருக் கின்ற சட்டங்கள் மற்றும் விதிகளின் படி கூட போதுமான நடவடிக்கையும், புலன்விசாரணையும், நீதி பெறுவதி லும் மிகப்பெரிய தாமதம் ஏற்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாலியல்  வன்கொடுமைகள் பற்றி விசாரிக்கக் கூடிய குழந்தைகள் சிறப்பு புலனாய்வு அலகுகள் இருக்க வேண்டும். அந்த  புலனாய்வாளர்களின் எண்ணிக்கை யும் குறைவாக இருப்பதாலும், குழந்தைகளுக்கான சிறப்பு  நீதி மன்றங்கள் இல்லாமல் இருப்ப தாலும், வழக்குகள் தீர்ப்பு வழங்கப் படாமல் தேங்கிக்கிடக்கின்றன.

அது மட்டுமல்லாமல் போக்சோ சட்டம் மற்றும் அதன் விதிகளின் படி பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு தரவேண்டிய மருத்துவ உதவி, பொருளாதார உதவி, பாதுகாப்பு, ஆலோசனைகள், இப்படி அனைத்து விசயங்களையும் ஒருங்கிணைத்து செய்வதற்கான, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமை காப்பாற்றா ளர்கள், மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பணிகள் செய்பவர்கள் எல்லாம் இன்னும் வரையறுத்து நியமிக்கப்படா ததும் ஒரு காரணம். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல் ஒரு புறம். பாதிக்கப்பட்ட குழந்தை களின் பெற்றோர் புகார் தெரி விப்பதற்கான எடுத்துக்கொள்ளும் சிரமங்கள் இன்னொரு புறம். முதல் தகவல் அறிக்கை பதிவது முதல் வழக்கில் தீர்ப்பு வரும் வரை அந்த பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுக்கப்படும் எல்லாவிதமான நிவாரணம் குறித்து சட்டங்களிலும், விதிகளிலும் அரசு தெளிவாக வரையறுத்தும் கூட நடைமுறையில் கிடைக்காத எட்டாக்கனியாக உள்ளது.  

சமீபத்தில் தமிழக அரசு நவம்பர் 20 ஆம் தேதி  குழந்தைகளுக்கான பாதுகாப்பு கொள்கையை அறிவித்துள்ளது. அதில் இன்னும் சில திருத்தங்களை மேற்கொண்டு நடைமுறை சாத்தியமாக்கி பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கும், பாதிப்பு ஏற் படாமல் எப்படி பாதுகாப்பது என்ற  பணிகளை போர்க்கால அடிப்படை யில் செய்ய வேண்டும். குழந்தைகள் உள்ள எல்லா நிறுவனங்களையும் இதற்கு எதிராக செயல்படும் பயிற்சி யை அளிக்க வேண்டும். அது அர சினுடைய மிகப்பெரிய கடமை. தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த  சட்டமே அரசுக்கு விழிப்புணர்வை ஏற் படுத்தும் கடமையை சட்டப்பூர்வமாக தருகிறது. அந்த பணியை அரசு உடனடியாக செய்ய வேண்டும். யாரெல்லாம் குழந்தைகளுக்கான பாதுகாப்பிற்காக போராடுகிறார்களோ அவர்களை எல்லாம் அரசு கவ னத்தில் எடுத்துக் கொண்டு இணைந்து செயல்பட வேண்டும்.

அப்போது தான் குழந்தைகள் பாதிக்கப்படும் போது எஸ்.எப்.ஐ. போன்ற அமைப்புகள் அரசுடன் சேர்ந்து ஒரு அங்கீகாரத்துடன் செயல்பட முடியும்.   போக்சோ வழக்கில் பிணை தரக்கூடாது. ஏனென்றால் போக்சோ வில் ஒரு நபர் குற்றவாளி என்று கரு தப்படுவாரேயானால் அந்த குற்ற வாளி தானாக முன்வந்து தான் குற்ற வாளி அல்ல என்று நிரூபிக்க வேண்டும். அந்த குற்றவாளி குற்றத்தை செய்வதற்கு துணை போகிறவர்களும் குற்றவாளிகள் என்று கருதப்படுவார்கள். சுரபி கல்லூரியின் தாளாளருக்கு பிணை வழங்கியது சட்டத்தின் சறுக்கல் அல்லது வழுக்கல் என்று தான் கொள்ள வேண்டும். இது ஒரு தவறான முன்மாதிரி மட்டுமல்ல கண்டிக்கத்தக்கதும் கூட.  பெரிய அந்தஸ்தில் உள்ள குற்றவாளிகள் எல்லாம் இப்படிப்பட்ட கடுமையான சட்டத்தில் கூட தப்பிக்க வாய்ப்பிருக்கும் என்ற ஒரு கருத்து பொதுபுத்தியில் தொடர்ந்து செலுத்தப்பட்டுக் கொண்டேயிருக்குமானால் அது சமூகத்தின் மிகப்பெரிய கேடு ஆகும். சுரபி கல்லூரி தாளாளருக்கு பிணை வழங்கப்பட்டதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.  (நநி)

;