மதுரை,அக்.9- இந்தியை திணிக்கும் அடுத்தகட்ட தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தயாராகி விட்டது என்றும் எட்டாம் அட்டவணை யின் அனைத்து மொழிகளுக்கும் சமத்து வம் என்ற கோரிக்கையை காற்றில் பறக்கவிட்டு, மொழி உரிமைக்கு எதி ராக ஒன்றிய பாஜக அரசு செயல்படு வதை தமிழகம் அனுமதிக்காது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: ஒன்றிய கல்வி நிறுவனங்கள் -கேந்திரிய, நவோதயா வித்யா லயாக்கள், ஐஐடி, ஐ.ஐ.எம், எய்ம்ஸ் வரை, ஒன்றிய அரசு பணி நியமனத் தேர்வுகள், ஐ. நா/ பயன்பாடு என எல்லாவற்றிலும் இனி இந்தி வழிதான். அலுவல் மொழி சட்டம், பிரிவு 1 இன் கீழான மாநிலங்களின் நீதிமன்றங்களில் இந்தி, அலுவல் பயிற்சிகளில், அலு வல் நிகழ்ச்சி நிரல்களில், தூதரகங்க ளின் தகவல் தொடர்பில் எங்கும் எல் லாம் இந்தி. அமித்ஷா தலைமை யிலான நாடாளுமன்ற அலுவல் மொழிச் சட்டக்குழுவின் 11 வது தொகுப்பில் பரிந்துரை. “வணக்கோம்”, அரைகுறை உச்ச ரிப்பில் குறள் எல்லாம் நமக்கு தந்த லாலிபாப். மொழி உரிமை, மொழி பன் மைத்துவம் மீதோ கடும் தாக்குதல். எட்டாம் அட்டவணையின் அனைத்து மொழிகளுக்கும் சமத்துவம் என்ற கோரிக்கை காற்றில் பறக்கவிடப் பட்டுள்ளது. இதனை தமிழகம் அனு மதிக்காது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.