tamilnadu

img

பணியாளர் தேர்வாணையத்தைக் கலைப்பது ஆபத்தானது

சென்னை, டிச. 20 மாநில அரசுப்பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யக்கூடிய பணியாளர் தேர்வாணையத்தை பல்வேறு  மாநில அரசுகள்  கலைத்து வருவது  ஆபத்தானது என்றும் இத னால் நிரந்தரமற்ற ஊழியர் முறை உருவாக்கப்படுவதாகவும்  அகில இந்திய அரசு ஊழியர் சம்மேளன தலைவர் ஸ்ரீகுமார் கூறினார். சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 14வது மாநில மாநாட்டை வாழ்த்தி அவர் பேசியது வருமாறு: 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் உணவகங்கள், கடைகள் என அனைத்து நிறுவனங்களும் மூடப் பட்டன. தனியார் மருத்துவமனை களும் மூடப்பட்டன. ஆனால் அரசு அலுவலங்களை மூடமுடியுமா?

முடியாது. அவை செயல்பட்டன.

பெருந்தொற்று காலத்தில்தான் ஆந்திராவிலும் உத்தரப்பிர தேசத்திலும் பஞ்சாயத்துத் தேர்தல் கள் நடத்தப்பட்டன. அதில் தேர்தல் பணியாற்றிய பல அரசு ஊழியர் கள் பெருந்தொற்றால் உயிரிழந்த னர். தமிழகத்திலும் பொதுச் சுகாதாரத் துறை, பொதுவிநியோகம், போக்கு வரத்து என பல துறைகளில் பணி யாற்றிய அரசு ஊழியர்கள் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

பெருந்தொற்றை கண்டு தனியார் நிறுவனங்கள் அஞ்சிய போது உயிரைப் பொருட் படுத்தாமல் பணியாற்றியவர்கள் அரசு ஊழியர்கள் தான். பழைய பென்சன் திட்டத்தின்படி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதை ஒன்றிய, மாநில அரசு கள் கைவிட்டுவிட்டு ஊழியர் பங்கேற்பு டன் கூடிய என்பிஎஸ் என்று அழைக்கப் படக்கூடிய  தேசிய ஓய்வூதிய திட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. தேசிய ஓய்வூதிய திட்டம் என்றும் அழைக்கப்படும் என்.பி.எஸ் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (பி.எஃப்.ஆர்.டி.ஏ) கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில்  7லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் உள்ளது. இந்த பணத்தைக் கைப்பற்றுவதில்  பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெரு நிறுவனங்கள் இடையே போட்டி நிலவுகிறது. இதற்கு ஆதரவாக மோடி அரசு செயல்படுகிறது. இந்தத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் கோருகின்றன. பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நாடு  தழுவிய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். பல மாநில அரசுகள் அரசு வேலைக்கு ஆட்கள் எடுப்பதை அவுட் சோர்சிங் விட்டுவிட்டன. தென்மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா மாநில அரசுகள் மட்டுமே  அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக ஆட்களைத் தேர்ந்தெடுக் கின்றன. ஆனால் நாட்டின் பிறபகுதி களில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு ஆட்களை எடுக்க அவுட் சோர்சிங் முறை பின்பற்றப்படுகிறது.  ஜம்மு  காஷ்மீரில் முன்பு இருந்து மெஹ்பூபா முப்தி தலைமையிலான அரசு இதற்காகவே அவுட் சோர்சிங் கார்ப்ரேஷனை ஏற்படுத்தியது. இது ஹரியானா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களிலும் வந்துவிட்டது.

தற்போது தமிழகத்திலும் அது தொடங் கப்படவுள்ளதாகத் தெரிகிறது. இது ஆபத்தானது.  நமது சங்க செயல்பாடுகளும் ஜனநாயக முறைப்படி இருக்கவேண்டும். ஒவ்வொரு ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் தலையிட்டு அவர்களுக்குத் தீர்வை பெற்றுத்தர வேண்டும். மேலும் நிரந்தர ஊழியர்கள் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த  ஊழியர்களையும் அணிதிரட்டு வதோடு அவர்களது பிரச்சனை களிலும் தலையிடவேண்டும். அரசுப்பணிகள் மட்டுமல்ல மின்சார வாரியம் உள்பட பல்வேறு வாரியங்களையும் தனியார் மயமாக்குமாறு மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்தப்படுத்தி வருகிறது. எனவே மோடி அரசின் மக்கள் விரோத புதிய தாராளமய பொருளாதார கொள்கைகளையும் எதிர்த்த போராட்டத்தையும் நாம் தீவிரப்படுத்தவேண்டும். எனவே பிப்ரவரி மாதம் மத்திய தொழிற்சங்கங்கள் 23, 24 தேதிகளில் நடத்தவுள்ள இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்களும் பெருமளவில் பங்கேற்கவேண்டும்.  இவ்வாறு  ஸ்ரீகுமார் பேசினார்.

அ.சவுந்தரராசன்

சிஐடியு மாநிலத் தலைவரும், வரவேற்புக்குழு தலைவருமான அ.சவுந்தரராசன் பேசுகையில்,  மேகம் எப்போது சூழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அது இப்போது திரண்டு வந்து விட்டது. நீர் சுமந்து வந்திருக்கிறது. அடுத்து இடி, மின்னல்தான். அதுதான் முதல்வர் என்றார்.  ஒன்றிய அரசின் தவறான முடிவுக ளுக்கு எதிராக குரல் கொடுத்துக் கொண்டு வருவதுடன் நீட் உள்ளிட்ட சமூக நீதிகோட்டுபாடுகளுக்கு வேட்டுவைக்கும் நடவடிக்கைக ளுக்கு எதிராகவும் சட்டப் போராட்டத் தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தி வருகிறார் என்றும் சவுந்தரரா சன் கூறினார்.  அங்கன்வாடி, ஆஷா, சத்துணவு, நூலகத்துறை, உள்ளாட்சித்துறை பணீயாளர்கள்,  பகுதி நேர ஆசிரியர் கள் இவர்களுடைய பிரச்சனைக ளுக்கும் அரசு தீர்வுகாண முன்வர  வேண்டும். தமிழக தொழிலாளர்களின் வாழ்வை பறிக்கக் கூடிய வகையில் ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வந் துள்ளது. அந்த சட்டத்தை எதிர்த்தும் அரசு குரல் எழுப்பி அந்த தொழிலா ளர்களையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.
 

;