tamilnadu

img

ஸ்மார்ட் சிட்டி மெகா ஊழல்: அவிழக் காத்திருக்கும் உண்மைகள்!

"உள்ளாட்சிகளுக்குப் போதிய அதிகாரமில்லை, நிதியில்லை" என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ஈரோடு, தஞ்சை, வேலூர், நெல்லை, தூத்துக்குடி உள்பட 12 மாநகராட்சிகளைத் தேர்வு செய்யப்பட்டன. அதில் சென்னை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 நகரங்களுக்குத் தலா 500 கோடி நிதியை வழங்கியது மத்திய அரசு. அதே அளவு தொகையை தமிழக அரசும் ஒதுக்கிப் பணிகள் நடந்து வருகின்றன. அதாவது ஒரு மாநகராட்சிக்கு 1000 கோடி. இதுபோக அந்தந்த மாநகராட்சிகள் கூடுதல் நிதியை திரட்டிக்கொள்ளவும் சட்டத்தில் வழிவகையுண்டு என்பதால், கூடுதல் ஒதுக்கீடு காரணமாக சில ஊர்களில் ஸ்மார்ட் சிட்டி நிதி 2000 கோடியைத் தாண்டிவிட்டது.

ஒவ்வொரு மாநகராட்சியிலும், ஒவ்வொரு வார்டிலும், ஒவ்வொரு தெருவிலும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. மக்களின் தேவைகளோ ஆயிரக்கணக்கில். 1000 கோடி நிதி இருக்கிறது, என்ன தேவை என்று கேட்டுச் செய்ய வேண்டியது மட்டும்தான் மாநகராட்சியின் வேலை. ஆனால், நடப்பதோ வேறு.

எதையாவது செய்து உடனே 40 சதவிகித கமிஷனை எடுத்தாக வேண்டும் என்று அவர்களாகவே ஒரு திட்டத்தைப் போட்டு அவர்களாகவே காசை எடுத்துக்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. உள்ளாட்சித் துறை அமைச்சர், மாநகராட்சி கமிஷனர், உள்ளூர் அமைச்சர்களே வேலைகளைத் தீர்மானித்துக் கொள்கிறார்கள். உதாரணமாக மதுரையில் கோரிப்பாளையம் சந்திப்பு, ஆவின் சந்திப்பில் மேம்பாலங்கள் தேவை. அங்கே பாலம் கட்டினால் நில ஆர்ஜிதம் செய்ய வேண்டியதிருக்கும். வழக்குகள் வரும். அதற்குள்ளாக 5 ஆண்டு ஆட்சி முடிந்துவிடும். கமிஷன் கிடைக்காது. எனவே, எங்கே இடம் இருக்கிறதோ அங்கே பாலத்தைக் கட்டுவோம் என்று மதுரை வைகை ஆற்றுக்குள் பாலங்களையும், தடுப்பணைகளையும், கரையோரச் சாலையையும் போட்டுக்கொண்டே இருக்கிறார்கள். உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் கேள்வி கேட்க ஆளில்லை. கவுன்சிலர்களுக்கு வேலையில்லை. என்ன காரணத்தினாலோ எதிர்க்கட்சி மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காக்கிறார்கள்.

மதுரையில் ஒரு ஆறுதல், இங்கே கேள்வி கேட்க ஆளிருக்கிறார்கள். காசு கொடுத்து ஓட்டு வாங்காத 2 மக்கள் பிரதிநிதிகள் மதுரையில் இருப்பது காரணமாக இருக்கலாம். சு.வெங்கடேசன் எம்பியும் (சிபிஎம்), பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏவும் (திமுக) ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி கேள்வி மேல் கேள்வி கேட்டு மாநகராட்சியையும், மாவட்ட நிர்வாகத்தையும் குடைந்தெடுக்கிறார்கள். (கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கண்டன போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கிறது.)

கடந்த 7.9.2020 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மதுரை மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, கலெக்டர் ஸ்மார்ட் சிட்டி பற்றி சில கேள்விகளைக் கேட்டார் சு.வெங்கடேசன் எம்பி. வியர்த்து வழிந்தார் மாநகராட்சி ஆணையரும், ஸ்மார்ட் சிட்டி நிறுவன நிர்வாக இயக்குனருமான விசாகன் ஐ.ஏ.எஸ். ஆனாலும், சந்தேகம் மேல் சந்தேகம், கேள்வி மேல் கேள்வியைக் கேட்டுக்கொண்டே இருந்தார் வெங்கடேசன். ஒரு மணி நேரத்தில் முடிய வேண்டிய கூட்டம், 6 மணி நேரம்... அதாவது இரவு 9.45 மணி வரையில் நடந்தது.  
 
அந்தக் கூட்டத்தில் மாநகராட்சி தாக்கல் செய்த ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை வெறும் 6 பக்கமே இருந்தது. "100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியும் தயாரித்த திட்ட அறிக்கையே இதைவிட அதிகப் பக்கங்கள் இருக்கின்றன. 2000 கோடியில் நடைபெறுகிற மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை 6 பக்கத்திலா?" என்று அதிர்ந்து போனார்கள் மக்கள் பிரதிநிதிகள். "மதுரை பெரியார் பேருந்து நிலைய திட்ட மதிப்பீடு 159.70 கோடி என்று கடந்த கூட்டத்தில் சொன்னீர்கள். இப்போது அது திடீரென 167.40 கோடியாக உயர்ந்திருக்கிறதே எப்படி?" என்று கேட்டார் எம்பி. பதில் இல்லை. "மதுரையில் சாதாரண பல்ப் பயன்படுத்திய மக்களுக்கு எல்இடி பல்ப் மாற்றிக்கொடுத்த வகையில் ரூ.21 கோடி செலவுக் கணக்கு காட்டியிருக்கிறீர்களே, அது எந்தப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது என்று சொல்லலாமா?? என்று கேட்க, அதற்கும் திருதிரு முழி மட்டுமே பதிலாகக் கிடைத்தது. "ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணியின் போது அஸ்திவாரம் தோண்டிய வகையில் மட்டும் சுமார் 12 ஆயிரம் கியூபிக் மீட்டர் மண் எடுத்தீர்களே, அதை எங்கே?" என்ற கேள்விக்கும் பதில் இல்லை.

கூடவே, "சட்டப்படி, ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டுமே... ஏன் இதுவரையில் நடத்தவில்லை?" என்று கேட்டார் சு.வெங்கடேசன். ஒரு மாதத்தில் நடத்துகிறோம் என்று கலெக்டரும், மாநகராட்சி ஆணையரும் உறுதி அளித்தார்கள். ஆனாலும், இன்னொரு முறை இந்தாளு வந்து கேள்வி கேட்பாரே என்று எண்ணினார்களோ என்னவோ கூட்டத்தைக் கூட்டவேயில்லை. ஆலோசனைக் குழுவின் தலைவரான கலெக்டருக்கு சு.வெங்கடேசன் நினைவூட்டியும், எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்தும் கூட்டத்தைக் கூட்டவேயில்லை.

கடைசியில், "நீங்கள் கூட்டாவிட்டால் என்ன? அந்தக் குழுவின் இணைத் தலைவர் என்கிற முறையில் நானே கூட்டத்தை நடத்துகிறேன்" என்று நேற்று அறிவித்தார் சு.வெங்கடேசன். 18.1.2021 (திங்கள்) காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெறும் என்று மற்ற உறுப்பினர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கடிதம் அனுப்பினார் சு.வெங்கடேசன்.

கலெக்டர், கமிஷனர் இருவரும் ஆடிப்போய்விட்டார்கள். எம்பிக்கு போன் போட்டு, "சார் இது பெரிய பிரச்சினையாகிடும். ஒரு மாசம் அவகாசம் கொடுங்க" என்று கெஞ்சியிருக்கிறார்கள். ஏற்கெனவே, "4 மாத அவகாசம் முடிந்துவிட்டதே" என்று சொன்னதும், "சரி 2 நாளாவது அவகாசம் கொடுங்க" என்று கேட்டிருக்கிறார்கள். "நான் நாளை மறுநாள் டெல்லி போகிறேன். வேண்டுமென்றால் ஒரு நாள் அவகாசம் தருகிறேன். 19ம் தேதி கூட்டத்தை நடத்துங்கள். ஆனால், அதை எழுத்துப்பூர்வமாக அதை அறிவித்தால்தான் நான் நம்புவேன். இல்லை என்றால் திட்டமிட்டபடி, 18ம் தேதியே நான் கூட்டத்தை நடத்திவிடுவேன்" என்று சொல்லியிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை என்றும் பார்க்காமல் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, ஆணையரும், மதுரை ஸ்மார்ட் சிட்டி லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான விசாகன் ஐஏஎஸ், எழுத்துப்பூர்வமாக கடிதம் எழுதி எம்பிக்கும், பத்திரிகைகளுக்கும் அனுப்பிவைத்திருக்கிறார்.

மாவட்ட வளர்ச்சிக் கூட்டத்திலேயே 6 மணி நேரம் கேள்வி கேட்ட எம்பி, இந்த அவசரக் கூட்டத்தில் என்னவெல்லாம் கேட்கப் போகிறாரோ தெரியவில்லை. பி.டி.ஆர்.பழனிவேல்தியாகராஜன் வேறு ஏகப்பட்ட கேள்விகளுடன் காத்திருக்கிறார். அமைச்சர் வேலுமணியே வந்தாலும், உண்மையை உடைத்துப் பேச முடியாது என்கிறபோது இவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ தெரியவில்லை.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடக்கிறது. எந்த ஊரிலும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக மதுரையில் கூட்டம் நடக்கிறது. இதை முன்வைத்து மற்ற மாநகராட்சிகளிலும் கூட்டம் நடத்த வலியுறுத்தப்படலாம். மூடி வைத்த ஊழல் மூட்டையொன்று அவிழக்கூடும் என்று எதிர்பார்க்கிறேன்.

பார்க்கலாம்.

ஊடகவியலாளர் கே கே மகேஷ்.

;