மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை, மே 19- பாலஸ்தீன மக்களை இனப்படு கொலை செய்து வரும் இஸ்ரே லுக்கு, சென்னையில் உள்ள நிறு வனம் மூலம் சென்னை துறைமுகத் தில் இருந்து 26.8 டன் ஆயுதங்கள் அனுப்பட்டுள்ள அதிர்ச்சி தக வல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஆயுதங்களை அனுப்பிய சென்னையில் உள்ள சித் தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் நிறு வனத்தை மூடி சீல் வைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சித் தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் என்ற பன் னாட்டு ஏற்றுமதி நிறுவனத்தின் மூல மாக, இந்தியாவில் உள்ள ஆயுத உற்பத்தி நிறுவனங்களால் உற் பத்தி செய்யப்பட்ட 28.6 டன் அள விற்கான வெடி மருந்துகள், வெடி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் டென்மார்க் கொடியுடன் கூடிய மரி யான் டேனிகா என்ற கப்பலில் இஸ்ரே லுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இஸ்ரேல் செல்லும் கப்பல்கள் செங்கடல் வழி யாக பனாமா கால்வாயை கடந்து இஸ்ரேலின் ஹபிபா துறைமுகத்தை அடைய வேண்டும். ஆனால் பாலஸ் தீனம் மீதான போர் துவங்கிய பிறகு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏம னைச் சேர்ந்த ஹவுதி படையினர், இஸ்ரேலுக்கு ஆதரவான நாடுகளின் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்கு தல் நடத்தி வருகின்றன. செங்கடல் வழியாக இந்தியா வந்த சில கப்பல்களும் இந்த தாக்கு தலுக்கு உள்ளாகியுள்ளன. அனுமதி மறுத்த ஸ்பெயின் இந்நிலையில் சென்னை துறை முகத்தில் இருந்து ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்கு கிளம்பிய மரியான் டேனிகா கப்பல் செங்கடல் பாதை யைத் தவிர்த்து ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றி இஸ்ரேலுக்கு சென்று கொண்டுள்ளது. இந்த பயணத்தின் போது ஸ்பெயின் துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதி கேட்டபோது அந்நாடு மறுத்துள்ளது. அதன் பிறகே சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களுடன் இப்படி ஒரு கப்பல் சென்று கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான ஸ்பெயின், பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளது. கடந்த வாரம் ஐநா சபையில் பாலஸ்தீனத்தை ஐநா உறுப்பினராக அங்கீகரிக்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கு முழு ஆதரவுடன் வாக்களித்திருந்தது ஸ்பெயின்.
தேவை ஆயுதமல்ல; அமைதி
மரியான் டேனிகா கப்பலுக்கு அனுமதி மறுத்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானு வல், “இந்தியாவில் இருந்து ஆயுதங்களுடன் இஸ்ரேல் நோக்கி சென்று கொண்டிருக் கும் மரியான் டேனிகா என்ற சரக்கு கப்பலை ஸ்பெயின் நாட்டின் கார்டஜீனா துறை முகத்தில் மே 21 அன்று நங்கூரமிட அனுமதி கோரிய நிலையில், அனுமதி மறுக்கப்பட்டது” எனத் தெரிவித்தார். மேலும் அவர், “நாங்கள் ஸ்பெயின் துறைமுகத்தில் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பலை கண்டறிவதும் அனுமதி மறுப்பதும் இதுவே முதல் முறை” என்றார். மேலும், “மத்திய கிழக்கிற்கு ஆயுதங்கள் தேவையில்லை, அதிக அமைதி தான் தேவை” என்றும் அவர் கூறினார்.
சென்னையில் இருந்து...
இந்தியாவில், அதுவும் சென்னையில் இருந்துதான் இந்த கப்பல் சென்றதா என்ற கேள்வி எழுந்த நிலையில், கப்பல்கள் இருக்கும் இடத்தை கண்டறியும் கடல் கண்காணிப்பு இணையதள நிறுவனமான வெசல் பைஃண்டர் (Vessel Finder) கொடுத்த தகவலின் படி, ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் மரியான் டேனிகா கப்பல் ஏப்ரல் 8 அன்று சென்னையிலிருந்து புறப்பட்டது என்றும், அந்த கப்பல் ஆப்பி ரிக்கக் கண்டத்தை சுற்றி மேற்கு ஆப்பிரிக்காவின் கேப் வெர்டே துறைமுகத்தை மே 13 அன்று சென்றடைந்தது என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் தற்போது மொராக்கோ கடற்கரையில் இருந்து மே 21 அன்று ஸ்பெயின் நாட்டின் கார்டஜீனா துறைமுகத்தில் நுழைய காத்திருக்கிறது எனவும் துல்லியமாக தெரியவந்துள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள சித்தார்த்தா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் சர்வதேச அளவில் சரக்கு பரிமாற்றம் செய்து வருகிறது. இந்நிறுவனம் மூலம் அனுப்பபட்டுள்ள 28.6 டன் ஆயுதங்களை இஸ்ரேலில் உள்ள கார்கோ லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பெற உள்ளது. ஸ்பெயின் அரசின் அனுமதி மறுப்பைத் தொடர்ந்து, இந்தியா ஏன் இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாக ஆயுதங்களை அனுப்புகிறது என்றும் பாலஸ்தீனர்களின் உயிரை விட ஆயுத முதலாளிகளின் லாபம்தான் உங்களுக்கு முக்கியமா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே சென்ற கப்பல் மரியான் டேனிகா கப்பலுக்கு முன்னதாகவே ஆன்டிகுவா மற்றும் பார்புடா கொடிகளுடன் ‘போர்க்கும்’ என்ற கப்பல் இந்தியாவில் இருந்து ஆயுதங்களுடன் இஸ்ரேல் சென்ற போது மே 16 அன்று ஸ்பெயின் துறைமுகத்தில் 11 மணிநேரமாக நிறுத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவந்துள்ளது. அந்த கப்பல் செக் குடியரசின் கோபர் துறைமுகத்திற்குச் செல்வதாக கூறப்பட்டதால் ஆயுத சோதனை நடத்தப்படவில்லை எனத் தெரிகிறது. ஆனால் பாலஸ்தீன ஆதரவு குழுக்கள் வெளியிட்ட தரவுகளில் அந்த கப்பல் கோபர் துறைமுகத்திற்குத் தான் செல்கிறது; அங்கிருந்து இஸ்ரேலின் ஹபிபா துறைமுகம் வெறும் 30 கி.மீ தொலைவில் தான் உள்ளது. கோபரில் நங்கூரமிட்டு, ஆயுதங்களை வேறு படகுகளில் இஸ்ரேலுக்கு கொண்டு செல்கிறார்கள் என்று அம்பலப்படுத்தியது. இதுமட்டுமல்ல, இந்திய அரசாங்கத்தின் மியூனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் இஸ்ரேலுக்கு வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்ததாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளன. 2024 ஏப்ரல் 18 அன்று அதே நிறுவனம் மீண்டும் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்ய விண்ணப்பித்திருந்தது. பிரீமியர் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் லிமிடெட் (PEL) என்ற தனியார் நிறுவனம், கடந்த ஆண்டு காசா மீதான இஸ்ரேலின் போர் தொடங்கியதில் இருந்து 2023 நவம்பர் 20 மற்றும் 2024 ஜனவரி 01 என இரண்டு முறை ஆயுதங்களுக்கான பாகங்கள் மற்றும் வெடி மருந்துகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.