tamilnadu

img

சிறுகதை - கூல் கேப்டன் பிஸ்மி!

காரைக்குடி சாதிக்  

தள்ளாடும் நடையுடன் கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் அந்த மூதாட்டி காரைக்குடி, செக்காலை ரோட்டிலுள்ள பிஸ்மி பேன்சி ஸ்டோரின் படியில் ஏற முயன்றார். அந்த கடையின் உரிமையாளர் காசிம் என்ற இயற்பெயரை மறந்த நணபர்கள், அவரை பிஸ்மி என்றே அழைத்துப் பழகிய முகம்மது காசிம் அந்த மூதாட்டியை பார்த்து படியில் ஏற முடியலனா பரவாயில்லை அம்மா, உங்களுக்கு என்ன வேணுமோ சொல்லுங்க. அதை வாசலுக்கே வந்து. தர்ரேனு சொன்னதை சிறிதும் சட்டை செய்யாமல் தடுமாறிப் படியேறி வந்தார். அவருக்கு உதவினார் பிஸ்மி. கடையின் உள்ளே வந்தவர், இந்த ஸ்டூலில் கொஞ்சம் உக்காந்துகிறேனு சொல்லி மெதுவாக அமர்ந்தார். ரொம்ப தாகமா இருக்கு தண்ணி தாங்கனு கேட்ட அந்த அம்மாவிற்குத் தான் பயன்படுத்தும் டம்ளரிலேயே தண்ணி கொடுத்தார் ரமலான் காலத்தில் நோன் பிருக்கும் பிஸ்மி. ஆற அமர  வாய் வைத்துத் தண்ணி குடித்த பிறகு அந்த அம்மாவிடம் என்னம்மா வேணும்னு பிஸ்மி கேட்க, ஒரு தோடு ஒன்று தாங்கனு கேக்க, இவரும் தோடுகளைக் காண்பிக்க, எந்தத் தோடும் பிடிக்கலைனு கூறிவிட்டு, வேறு எங்கே தோடு கிடைக்கும் என்ற கேள்விக்கு சரியான கடையை, அடையாளத்தையும் வழியையும் பொறுமையாகக் கூறி அந்த அம்மாவை வழி அனுப்பி விட்டு என்னுடன் உரையாட ஆரம்பித்தார் பிஸ்மி. அந்த அம்மா மெது வாகப் படி இறங்கும் பொழுது கடை வாயிலில் இருந்த ஸ்டூலில் இருந்த பர்சை, யாரும் கவனிக்காதவாறு தன்னுடைய தடுமாறும் நடைக்குப் பிடிமானமாகப் அந்த ஸ்டூலைப் பிடிப்பது போல சாதுர்யமாக அந்தப் பர்சை எடுத்தார்.

இதைப் போல நிறைய வாடிக்கை யாளரைப் பார்க்கும் பிஸ்மி அந்த அம்மாவிடம், இந்த பர்சு உங்களோடதாம்மா என்று கேட்க, ஆமாம் என்று எந்தச் சந்தேகமும் வராதவாறு இயல்பாகப் பதிலளிக்க, அப்பொழுது பிஸ்மி கடையில் வேலை பார்க்கும் பெண்ணிடம் உங்க பர்சாமா என்று கேட்க, கடை உள்ளே பொருட்களைத் துடைத்துக் கொண்டிருந்த அந்தப் பெண், ஆமாம் சார் என்னோட பர்சு தான் சார் அது, பர்சுக்குள்ள என்னோட செல்போன் இருக்கு என்று கூற, பிஸ்மி கூல் கேப்டன் டோனி போல, மிகவும் இயல்பாக அம்மா அந்த பர்சு உங்களோடது இல்லம்மா. இங்க வேலை பாக்குறவங்களோட பர்சு எனப் பர்சைக் கேட்க, அந்த அம்மாவும் சாதாரணமாக பர்சைத் திருப்பிக் கொடுத்தார். அதனுள் அந்த வேலையாள் கூறியது போல அவருடைய செல் போனும் இருந்தது.  தடுமாறிப் படி இறங்கும் அந்த அம்மா விற்கு மீண்டும் படி இறங்க கைகளைப் பற்றி  மெதுவாக இறக்கி விட்டு, மீண்டும் அடுத்த கடைக்கு வழி கேட்கும் அந்த அம்மாவிற்கு கடை வாயிலை விட்டு இறங்கி பொறுமையா வழி காண்பித்து அனுப்பி வைத்துவிட்டு என்னுடன் உரையாட வந்தார் பிஸ்மி. பர்சைத் திருடிய அந்த வயோதிக அம்மாவை ஒரு வார்த்தை கூட கடிந்து பேசாமல் எப்படி உங்களால் இயல்பாக இருக்க முடிகிறதெனக் கேட்டேன். சார், இந்த அம்மா மாதிரி சில பேர் இருக்காங்க. அவங்க வரும் பொழுது நாம தான் கவனமாக இருக்கனும். அந்த அம்மா உண்மையிலயே நடக்க முடியாத, வறுமையில் வாடும் ஏழை யாக இருப்பது உறுதியாகத் தெரிகிறது. வறு மையில் பர்சை எடுத்த ( தப்பித் தவறி கூட திருட்டு என்று பிஸ்மி கூறாதது என்னை மேலும் ஆச்சரியப்படுத்தியது) அவருக்கு நான் தான் ஏதாவது உதவி செய்ய வேண்டும். அவர் உதவி கேட்காத நிலையில் நான் ஏதாவது பணம் கொடுத்தால் அவர் அதை யாசகமென நினைத்து மறுக்கவும் வாய்ப்பு உண்டு.

அது மட்டுமன்றி அவருடைய தன்மானமும் பாதிப்படைய வாய்ப்புண்டு என்று கூறினார் பிஸ்மி. இந்த பர்சு விசயத்தை ஒரு பொருட்டா கவே நினைக்கவில்லை. பத்துக்குப் பத்தான பிஸ்மி பேன்சி  ஸ்டோரில் வாழ்வை ஓட்டுவதற்கே வருமானம் ஈட்டித் தரும் உத்தரவாதம் எதுவும் இல்லாத வியாபாரத்தில் தான் இவ்வளவு பொறு மையாக மனிதாபிமானம் மிக்கவராக என் பார்வையில் படும் பிஸ்மி என்ற காசிமின் கடையில் ஒருநாள் நடந்த உண்மைச் சம்ப வத்தில் எந்தப் புனைவுமின்றி அவருடைய பெயரை, ஊரை, கடையை மாற்றாமல் உள்ளது உள்ளபடியே பதிந்திருக்கிறேன் அடுத்தவரின் சிறு தவறைக்கூட பூதக் கண்ணாடி வைத்துப் பார்த்துப் பெரிதாக்கும் பலரின் முன்பு பத்தாவது கூட தாண்டாத பிஸ்மி என்றழைக்கப்படும் முகம்மது காசிம் பல பி.எச்.டி களுக்குச் சமம் என்றுணர்ந் தேன்.

;