tamilnadu

வக்ஃப் வாரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரிவு தேர்தல்

சென்னை,டிச.2- தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பி னர்களுக்கான தேர்தலுக்கு, நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு தேர்தல்  அறிவிப்பை தமிழக அரசு வெளியிட் டுள்ளது. இதுகுறித்துப் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும்  அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட் ்டுள்ள அறிவிப்பு வருமாறு:- தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பி னர்களுக்கான தேர்தலுக்கு, நாடாளு மன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு  பின்வரும் தேர்தல் கால அட்டவணை டிச. 3  அன்று நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளி யிடப்பட்டுள்ளது. அதன் படி டிச.6 திங்கட்கிழமை முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். கடைசி நாள் டிச.8 புதன்கிழமை பிற்பகல் 3 மணிவரை. தேர்தல் அவசியமானால் டிச. 15 புதன்கிழமை வாக்குப் பதிவு காலை 10 மணி முதல் மாலை 4  மணி வரை, தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001-இல் நடை பெறும். டிச. 16 வியாழக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.  இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.