புதுச்சேரி, டிச. 16- சத்யஜித்ரே நூற்றாண்டு விழா புதுச்சேரியில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தமிழ் மாநில பொருளாளரும், விழா ஒருங்கி ணைப்பாளருமான எஸ். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 10 ஆண்டுகளாக புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சர்வதேச ஆவணப்பட குறும்பட திரு விழாவை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி திரை இயக்கம். அலையன்ஸ் பிரான்சிஸ் புதுச்சேரி, மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்பு கள் இணைந்து இந்திய திரையுலக மேதை சத்யஜித்ரே வின் நூற்றாண்டு திருவிழாவை தற்போது நடத்துகிறது. இத்திருவிழா வெள்ளிக்கிழமை டிச. 17 இல் துவங்கி 18,19 ஆகிய மூன்று நாட்கள் அலையன்ஸ் பிரான்சிஸ் திரையரங்கில் நடைபெறுகிறது.
9 திரைப்படங்கள்
இத்திருவிழாவில் சத்தியஜித்ரே உருவாக்கிய உலக அளவில் இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்த்த விருதுகள் பல பெற்ற ஒன்பது திரைப் படங்களும், ஷியாம் பெனகல் உருவாக்கிய சத்யஜித்ரே ஆவணப்பட மும் திரையிடப்படவுள்ளது. துவக்க நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு முதல் படம் உலக அளவில் அனைத்து திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்ட “பதேர் பாஞ்சாலி” திரையிடப்படவுள்ளது.
திரைக் கலைஞர்கள்
தொடக்கக் விழாவில் அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லம் சதீஷ் வரவேற்க, தமுஎகச கவுரவத் தலைவர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் தலைமையேற்கிறார். திரைக் கலைஞர்கள் திரிதிமான் சேட்டர்ஜி, எடிட்டர் லெனின், ரோகிணி, இயக்குனர் கள் சிவகுமார், லெனின் பாரதி சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கி றார்கள். புதுச்சேரி சுற்றுலாதுறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரஞ்ச் தூதர் லசி டல் போட் பரே, அலையன்ஸ் பிரான்சிஸ் இயக்குனர் லீலா, டாக்டர் பழனி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்விலும் தமுஎகச பொதுச் செயலாளர்ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர் வீ.பா.கணேசன், தமுஎகச திரை இயக்க நிர்வாகிகள் எஸ்.இராமச்சந்திரன், களப்பிரன், வீர.அரிகிருஷ்ணன், உமா அமர்நாத். கலிய மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கி றார்கள். தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 160க்கும் மேற்பட்ட திரை இயக்க ஆர்வலர்கள் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். இச்சந்திப்பின்போது அலையன்ஸ் பிரான்சிஸ் தலைவர் டாக்டர் நல்லம் சதீஷ், இயக்குனர் லீலா, தமுஎகச திரை இயக்க ஒருங்கிணைப்பாளர் களப்பிரன், புதுச்சேரி நிர்வாகிகள் கலியமூர்த்தி, ரவிச்சந்திரன், ரமேஷ் ஆகியோர் உடனி ருந்தனர். முன்னதாக சத்யஜித்ரே குறித்து சிறு பிரசுரம் வெளியிடப்பட்டது.