tamilnadu

img

தொழிற்சங்கம் இல்லை என்றால் அடிமைத்தனம் ஒழிந்திருக்காது

சென்னை, டிச. 18- தொழிற்சங்க இயக்கங்கள் இல்லை என்றால் ஆண்டான் அடிமைத்தனம் ஒழிந்திருக்காது என அரசு ஊழியர் சங்க மாநாட்டில் சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவித்தார்.  அரசு ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநாடு சென்னையில் சனிக்கிழமை (டிச. 18) துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில், ஒரு நீண்ட போராட்ட வரலாறு கொண்ட இயக்கம் அரசு ஊழியர் சங்கம். இந்திய தொழிற்சங்க வரலாற்றில் தமிழகத்தின் தொழிற்சங்க இயக்க வரலாறு  திரும்பி பார்க்க வைத்த வரலாறு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.  இந்தியாவிலேயே தொழிற்சங்கத்தினு டைய குரலை அரசியல் குரலோடு இணைத்து முத லில் ஒரு முழக்கத்தை முன்வைத்தவர்கள், போராட்டத்தில் களம் கண்டவர்கள் தமிழர்கள்தான். தூத்துக்குடியில் வஉசி அதை மேற்கொண்டார்.  ஒரு சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், தேச விடு தலையின் தவிர்க்க முடியாத குரலாகவும் அவர் திகழ்ந்தார். அதன்பிறகு ஒரு வருடம் கழித்துதான் மும்பையிலே இந்திய தொழிலாளி வர்க்கம் அர சியல் பிரச்சனைகளில் தலையிடும் அளவிற்கு பக்கு வப்பட்டு விட்டது என லெனின் எழுதினார்.  தமிழக அரசு ஊழியர் சங்க வரலாற்றை பார்க்கும் போது 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடு சுதந்திரம டைந்த 3 மாதத்தில் அரசு ஊழியர்கள் ஜகதீசனார் தலைமையில் போராட்டம் நடத்தினார்கள். நிலப் பிரபுத்துவப் பண்பாட்டில் மூழ்கித் திளைத்த ஒரு நாட்டில் நிலப்புரத்துவ மன நிலைதான் ஆட்சியா ளர்களின் மனநிலையாக, அதிகார வர்க்கத்தின் மன நிலையாக இன்றுவரை இருக்கிறது. நவீன உலகமய மாக்கல் சூழலில் தொழிற்சங்க இயக்கம் என்ன செய்தது, தொழிற்சங்க இயக்கம் தொழில்களை அழித்தது, வேலை பணி கலாச்சாரத்தை அழித்தது என பல அறிஞர்கள் பொய்யுரைத்துக் கொண்டி ருக்கிறார்கள். 

ஆனால் தொழிற்சங்க இயக்கம் என்று ஒன்று இல்லை என்றால் இன்றுவரை ஆண்டான் அடிமை யான நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தில் இருந்து இந்தியாவினுடைய எந்த அரசு அமைப்புகளும் விடு பட்டிருக்காது, அதை ஜனநாயக அமைப்பாக மாற்றி யது இந்திய தொழிற்சங்க இயக்கம்தான். ஆமாம் சாமி போடுகின்ற, கும்பிட்டு கிடக்கின்ற அந்த நிலப் பிரபுத்துவ மனநிலையை அரசு அலுவலகங்களில்,  தொழில் அமைப்புகளில் இருந்து விரட்டி ஜனநாயக அமைப்பாக. சட்டப்பூர்வமான உரிமையை பெற்ற பணியாளர்கள் என்ற இடத்திற்கு அவர்களை கொண்டு வந்து சேர்த்த பெருமை, சாதனை தொழிற் சங்கங்களையே சாரும். நீண்ட நெடிய போராட்டத்தில் அரசு ஊழியர் சங்கம் பயணித்திருக்கிறது. அரசு ஊழியர்கள் மக்க ளுக்கு அனுசரணையாக இல்லாதவர்கள் , மக்களை விட்டு விலகியிருப்பவர்கள், மக்களை மீண்டும் மீண்டும் ஒரு அதிகாரத்தின் குரலின் வழியாக பார்க்கி றவர்கள் என்று தொடர்ச்சியாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் மீண்டும் மீண்டும் கூறப்படும் இந்த நேரத்தில். அரசு ஊழியர் இயக் கங்கள் ஒரு மாபெரும் கருத்தியலோடு பொது சமூகத்தை சந்திக்கின்ற ஒரு காலமாக தற்போதைய காலம் உள்ளது. அதற்கு மிக முக்கிய காரணம் இரண்டு கோவிட் பெருந்தொற்று காலத்தில் மனி தர்களுக்கும், சமூகத்திற்கும் ஒவ்வொரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், மரணத்திற்கு அருகில் பணி செய்தவர்கள் அரசு ஊழியர்கள் என்பதை கம்பீரமாக கூறமுடியும். சமூ கத்தில் எந்த பிரிவும் பார்க்காத வேலையை தொற்று காலத்தில் ஒருவர் கூட மரணமடையாத அரசு அலு வலகம் கூட இருக்காது. எந்த சமூகப் பிரிவும் செய்யாத தியாகத்தை செய்தவர்கள் அரசு ஊழியர்கள். 

5 விழுக்காடும், அரசு மருத்துவமனைகளுக்கு 75 விழுக்காடும் ஒதுக்கினார். தனியார் மருத்துவமனை எவ்வளவு நபருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது, அரசு மருத்துவமனைகள் எவ்வளவு நபருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளன என்ற விவரத்தை அளியுங்கள் என கடந்த புதனன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன். அதனடிப்படையில் அரசு வழங்கிய அந்த விவரத்தில், 110 கோடி மக்களுக்கு செலுத்தப் பட்டுள்ள தடுப்பூசிகளில் தனியார் மருத்துவமனை கள் வெறும் 3.7 விழுக்காடு தடுப்பூசிகள் மட்டுமே செலுத்தியுள்ளன. ஆனால் அரசு மருத்துவமனை கள் 76.7 விழுக்காடு தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன. எவ்வளவு பெரிய பேரழிவு காலத்திலும் தனியார் நிறு வனங்கள் மக்களை நடு ஆற்றில் விட்டு விட்டு செல் வார்கள், ஆனால் மக்களை காப்பாற்றுவது அரசு ஊழியர்கள் என்பதை சுட்டிக் காட்டினார். அரசு ஊழியர்களுக்கு எதிராக, அரசு நிறுவனங்க ளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வெளியே கட்ட மைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங் களை எதிர்கட்சிகளால் 5 நிமிடம் கூட நிறுத்தி வைக்க முடியவில்லை. ஆனால் போராட்ட களத்தின் மூலம் அந்த சட்டத்தை வாபஸ்பெற வைத்திருக்கிறார்கள் விவசாயிகள். இந்திய அரசியலை தீர்மானிப்பது அதிகாரவர்க்கத்தின் வடிவமாய் இருக்கின்ற அமைப்பல்ல? உழைக்கும் மக்களின் உரிமைக் குரலை பிரதிபலிக்கின்ற போராட்ட களம்தான் என் பதை இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அள விற்கு நெற்றியில் அறைந்து தீர்மானித்திருக்கிறார் கள்.  அவர்கள் நடத்திய 1 ஆண்டு போராட்டம் முக்கிய மானது. பிரதமர் வாபஸ் பெறுகிறேன் என்று கூறிய பின்னரும் அடுத்து 22 நாட்கள் அவர்கள் நடத்திய போராட்டம்தான் அதைவிட முக்கியமானது. நீ வீட்டை விட்டு வா என்றால் வருவதற்கும், நீ வீட்டிற்கு போ என்றால் போவதற்கும் நாங்கள் என்ன பாஜக எம்பியா? இந்த நாட்டினுடைய விவசாயிகள், தொழிலாளிகள். நாங்கள் எப்போது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நாங்கள் தீர்மானிப்போம் உன் வார்த்தையில் உண்மையில்லை, நம்பிக்கை யில்லை என்று போராட்டத்தை தொடர்ந்தார்களே அதுதான் விவசாயிகளின் மிகப்பெரிய வெற்றி என்றார். 

700 பேர் உயிரை பறிகொடுத்து, அறவழியில் நின்று போராடியதால் இந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று எந்த பத்திரிகையும், ஊடகங்க ளும் கூறவில்லை. மாறாக இந்த சட்டத்தை வாபஸ் பெற்றதால் இந்தியாவிற்கு எவ்வளவு பெரிய இழப்பு என்றுதான் எழுதினார்கள். இதுதான் கார்ப்பரேட்டுகள் கட்டமைக்க நினைக்கின்ற இந்தியா. எவ்வளவு போராடினாலும், தியாகம் செய்தா லும் அதற்கெதிரான பொதுபுத்தியை கட்டமைப்போம் என்று கட்டமைக்கும் இந்த காலத்தில் அரசு ஊழி யர்களுக்கு எதிராக கட்டமைக்கப்படும் அனைத்து கட்டமைப்புகளையும் மக்களின் துணையோடு வென்று காட்டுகின்ற, உடைத்துக் காட்டுகின்ற மகத்தான பணி உங்களுடையது, அதை நீங்கள் வலிமையாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். 

புதிய ஓய்வூதிய திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்பாதது இவையெல்லாம் ஒரு ஆட்சியின் கொள்கை சார்ந்த விஷயம் மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாக மூலதனத்திற்கும், பெரு முதலாளி களும், கார்ப்பரேட்டுகளும் கடைபிடித்துக் கொண்டி ருக்கின்ற கொள்கையினுடைய பகுதிகள். எனவே தான் முழுக்க முழுக்க பள்ளிகள், சுகாதாரம் என அனைத்து துறைகளும் தனியார்மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.  இந்த பின்னணியில் தான் வேலைவாய்ப்பை பறிப்பது, புதிய நியமனங்க ளுக்கு மறுப்பது போன்றவை சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றன என்றார். சமூக நலனை உறு திப்படுத்துவதற்குத்தான் ஓய்வூதிய திட்டம். அந்த ஓய்வூதியத்தை தர மறுகிறது அரசு. ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் நீதிபதிகளுக் கான ஓய்வூதியம் 5 வருடங்களில் இரண்டு மடங்காக உயர்த்த ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்பட்டும் விட்டது. சமூகத்தில் புதிய ஓய்வூ திய திட்டம் அமல்படுத்தும்போது, எங்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கப்படுவது, உயர்த்தப்படுவது சலு கையா அல்லது அதற்கு வேறு பெயரா என கேட்கின்ற ஒரு குரல் நீதித்துறையில் இருந்து வந்தால் அதுதான் நீதியின் குரல் என்றார்.

மக்களை பிரித்தாளுகின்ற வேலையை மட்டுமே அரசியல் என்று கூறும்போது, அனைத்து முன்னேற் றங்களையும் பின்னுக்கு தள்ளுகின்ற சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. வகுப்புவாதத்தை கிளப்பிவிட்டு அனைத்து முக்கிய பிரச்சனைகளையும் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசு அலுவலகங்க ளில் எந்த மதத்தினுடைய அடையாளங்களும் இருக்கக் கூடாது, மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடையாளமாக இருக்க வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டம்  கூறுகிறது. அந்த அரசியல் சாசனம் கூறும் அந்த பிரிவை அரசு அலுவலகங்களில் நிறை வேற்றுவதை உறுதிப்படுத்தும் இடத்தில் நாம் இருக் கின்றோம். சமூக நீதியை, பாலின சமத்துவத்தை பேணிக்காக்க வேண்டும் என்றார். அடுத்த 5 ஆண்டுகளில் தற்போது நிரந்தரப் பணியில் இருப்பவர்களில் 40 முதல் 60 விழுக்காட்டினர் பணி யை இழக்கப் போகிறார்கள். அடுத்த 10 ஆண்டு களுக்குள் இந்திய சமூகம் சந்திக்கப் போகின்ற சுனாமி சாதாரணமானதல்ல. ஒரே வேலையை மீண்டும் மீண்டும் செய்ய மனிதன் தேவையில்லை என்பதுதான் 4ஆவது தொழில்புரட்சியின் ஒற்றை வாசகம். முதல் தொழில்புரட்சி 10 ஆயிரம் பேர் வேலை செய்த ஒரு நூற்பாலையில், ஒரு நீராவி என்ஜினை கொண்டு வந்து 1000 பேராக குறைந்தது. ஒரு அரசு அலுவலகத்தில் ஆயிரம் பேர் செய்யும் பணியும் இனி 3 ரோபோக்கள் செய்யவிருக்கின்றன. மீண்டும் மீண்டும் மோடி 4ஆவது தொழில் புரட்சியை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறார். அது மோடியின் குரல் அல்ல, அதானியின், அம்பானியின் குரல், கார்ப்பரேட்டுகளின் குரல், உலக மூலதனத்தின் குரல். எனவே ஒற்றையாக ஒரேமாதிரி பணியாற்றிக் கொண்டிருக்கின்ற 60 விழுக்காட்டினர் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டிற்கு அனுப்பப்பட இருக்கிறார்கள். பொதுச்சமூகத்தில் உருவாகின்ற கொந்தளிப்பை அரசு ஊழியர்களுக்கு எதிராக திருப்பி விடுகின்ற வேலை மிக எளிதில் நடைபெறும்.

சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலத்தில் அடிமை இந்தியாவில் இருந்ததை விட இப்போது நிலைமை மோசமாக இருக்கின்றது. அடிமை இந்தி யாவின், காலனி இந்தியாவின், 10 விழுக்காடு மக்களி டம் இருந்த 50 விழுக்காடு செல்வமும் வருமானமும் இருந்தது. 2009க்கும் 2019க்கும் இடையே இப்போது 10 விழுக்காடு மக்களிடம் 57 விழுக்காடு செல்வமும், வருமானமும் இருக்கின்றது. இது காலனி ஆட்சிக்காலத்தில் இருந்ததைவிட மிக மோச மான நிலை. இது சமூகத்தில் ஒரு பெரும் கொந்த ளிப்பை உருவாக்கும். அந்த கொந்தளிப்பில் ஆளும் வர்க்கம் தனது கேடயமாக பயன்படுத்தப்போவது அரசு ஊழியர்களைத்தான் என்பதை மறந்து விடா தீர்கள்.  எனவே ஒட்டுமொத்த அரசியல் பார்வையோடு இணைந்து உங்கள் பயணத்தை தொடர வேண்டும், வலிமையாக இயக்கத்தை கட்டமைக்க வேண்டும். நாங்கள் உங்கள் கேடயமல்ல, மூலதனத்திற்கும், உழைப்பு சுரண்டலுக்கும் எதிராக போராடுகின்ற, மக்களின் தோழர்கள் நாங்கள் என்பதை அரசிய லாக நிரூபிக்கின்ற இயக்கமாக, வடிவமாக அரசு ஊழியர் சங்கம் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

;