tamilnadu

சு.வெங்கடேசன் எம்.பி., கோரிக்கை... 1ம் பக்கத் தொடர்ச்சி...

பிறகு இந்தியப் பருத்தி கழகம் விலைகளை உயர்த்த ஆரம்பித்துவிட்டது. இந்த நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் ஏற்றப்பட்ட விலை விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.இது தெரிவு செய்யப்பட்ட இந்த நிறுவனங்களுக்கு ரூ.700 கோடிக்கும் மேல் லாபத்தை தந்துள்ளது. இந்த தொகை எந்த வகையிலும் விவசாயிகளுக்கோ, ஜவுளித் தொழிலுக்கோ போய்ச் சேரவில்லை. இந்த தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. விசாரணை தேவைப்படுபவையாகவும் உள்ளன.இதே நிறுவனங்கள் அடுத்தடுத்தும் இப்படி கொள்முதல் செய்துள்ளதாக அறிய வருகிறேன். அரசு நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்தி இதே தந்திரத்தைக் கையாண்டு லாபம் பார்த்துள்ளார்கள். இதன் வாயிலாக மிக அதிகமான நிதியாதாரக் கசிவு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியப் பருத்திக் கழகம் உண்மையான பயனீட்டாளர்களுக்கே விற்பனை செய்ய வேண்டும். அவர்கள் விரும்புகிற தரத்திலான பருத்தியை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதில் அதில் சம்பந்தப்படுபவர்கள் திருப்தி அடைகிற வகையிலான முறைமை வெளிப்படைத் தன்மை உறுதி செய்யப்பட வேண்டும்.ஆகவே இந்த நடவடிக்கைகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட்டு பொது மக்கள் கவனத்திற்குஉண்மையைக் கொண்டு வருமாறு வேண்டுகிறேன்.இதற்கான விதிகள், ஒழுங்காற்று நடைமுறைகளை முறைப்படுத்தி ஓர் வெளிப்படையான செயல்பாட்டை எதிர்காலத்திற்கு உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.